திருமுறை 10 · 10.08.13 · 51

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துளவாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்காலனும் இல்லை கருத்தில்லை தானே.
சொற்பிரிப்பு
காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்காலனும் இல்லை கருத்தில்லை தானே
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பதுதான்மா மறையறை தன்மை அறிகிலர்ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.

4

உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்கதிசாக் கிரங்கன வாதி சுழுத்திபதிதரு சேதனன் பற்றாம் துரியத்துஅதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே.

5

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகிநல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.

6

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

7

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்துஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்ஆன வகையை விடும்அடைத் தாய்விடஆன மலாதீதம் அப்பரந் தானே.

8

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்துஅத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.

9

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகைவேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டுவேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

10

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரைநிறஞ்சேர் மத்தின் மலத்தினின் நின்றஅறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந்துஇறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

11

தானே சிவமான தன்மை தலைப்படஆன மலமும்அப் பாச பேதமும்ஆன குணமும் பரான்மா உபாதியும்பானுவின் முன்மதி போல்படராவே.

12

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்குஅருக்கனும் சோமனும் அங்கே அமரும்திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

13

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்குஊனை இருளற நோக்கும் ஒருவற்குவானகம் ஏற வழிஎளி தாமே.

14

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்தாடித் தெழுந்த தமருக ஓசையும்பாடி எழுகின்ற வேதாக மங்களும்நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.

15

முன்னை அறிவினில் செய்த முதுதவம்பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்பின்னை அறிவது பேயறி வாகுமே.

16

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

17

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்துஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

18

தொலையா அரனடி தோன்றும் அச்சத்திதொலையா இருளொளி தோற்ற அணுவும்தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

19

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்திமான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவைதான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.

20

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியா திருந்தேன்அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்திஅறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

21

தான்அவ னாகிய ஞானத் தலைவனைவானவ ராதியை மாமணிச் சோதியைஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியைஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

22

ஒளியும் இருளும் பரையும் பரையுள்அளியது எனலாகும் ஆன்மாவை யன்றிஅளியும் அருளும் தெருளும் கடந்துதெளிய அருளே சிவானந்த மாமே.

23

ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்துஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்கோன்அந்தம் வாய்க்கும் மகாவாக் கியமாமே.

24

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கேஅறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.

25

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

26

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்தானே அறிவான் அறிவு சதசத்தென்றுஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

27

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கேதத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவேதத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.

28

தன்னை அறிந்து சிவனுடன் தானாகமன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளிநன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.

29

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலான்மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.

30

உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனேஉயிர்ச்செயல் அன்றி அவ்வுள்ளத்து ளானே.

31

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்பழியற்ற காரண காரியம் பாழ்விட்டுஅழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.

32

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகிஇல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்றுஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.

33

உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்திஉயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்உயிரிச்சை யூட்டி யுடனுறலாலேஉயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.

34

சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே.

35

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்எய்தினர் செய்யும் இறையருள் தானே.

36

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

37

அவமும் சிவமும் அறியார் அறியார்அவமும் சிவமும் அறிவார் அறிவார்அவமும் சிவமும் அருளால் அறிந்தால்அவமும் சிவமும் அவனரு ளாமே.

38

அருளான சத்தி அனல் வெம்மை போலபொருள் அவனாகத்தான் போதம் புணரும்இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்திருவருளா னந்தி செம்பொருளாமே.

39

ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்பஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.

40

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்போதம் புணர்போதம் போதமும் நாதமும்நாத முடன்நாத நாதாதி நாதமும்ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.

41

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதிபூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.

42

ஆறாது அகன்று தனையறிந் தானவன்ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்தவேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

43

தீண்டற்கரிய அரிய திருவடி நேயத்தைமீண்டுற்று அருளால் விதிவழியே சென்றுதூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

44

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

45

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

46

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.

47

அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னைஇருசுட ராகி இயற்றவல் லானும்ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.

48

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்உள்கின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனேகண்ஒன்று தான்பல காணும் தனைக்காணாஅண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.

49

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்றுகூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.

50

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்குறிஅறி யார்கடங் கூடல் பெரிதுகுறிஅறி யாவகை கூடுமின் கூடிஅறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.

51

ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்தானே பிறப்போடு இறப்பறி யாரே.