திருமுறை 10 · 10.08.04 · 16

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயிசாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயைசாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்தோயும் சுழுமுனை கனாநனா வும்துன்னிஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.

3

மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டுமேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெறமூவயின் ஆன்மா முயலும் கருமமே.

4

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்றுசத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

5

வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்றுநச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

6

நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

7

ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலைகோலங்கொண்டு ஆங்கே குணத்தினுடன் புக்குமூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.

8

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்கூடிய காமம் குளிக்கும் இரதமும்நாடிய நல்ல மனமும் உடலிலே.

9

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.

10

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒன்பான்தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்துவிளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

11

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவைகோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.

12

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே.

13

தத்துவ மானது தன்வழி நின்றிடில்வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழிதத்துவம் ஆவது அகார எழுத்தே.

14

அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்திஅறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.

15

சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதிபோக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறுநீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.

16

ஆணவ மாதி மலம்ஐந்து அலரோனுக்குஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்குஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்பஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.