திருமுறை 10 · 10.08.03 · 25

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம்கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனைமெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகிஅப்பதி யாகும் நியதி முதலாகச்செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.

3

இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரைமந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்பந்தஅச் சாக்கரப்1 பாலது ஆகுமே.பா-ம் : 1 சாக்கிரப்
சொற்பிரிப்பு
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரைமந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்பந்தஅச் சாக்கரப்1 பாலது ஆகுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பாரது பொன்மை பசுமை உடையதுநீரது வெண்மை செம்மை நெருப்பதுகாரது மாருதம் கறுப்பை உடையதுவானகம் தூமம் மறைந்துநின் றாரே.

5

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்1ஏதம் படஞ்செய்து இருந்த புறநிலைஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடுஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.பா-ம் : 1 ஐயைந்தும்
சொற்பிரிப்பு
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்ஏதம் படஞ்செய்து இருந்த புறநிலைஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடுஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனைபடுபர சேனையும் பாய்பரி ஐந்தும்உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

7

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவிஉடம்பிடை நின்ற உயிரை அறியார்உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

8

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்முருக்கும் அசபையை மாற்றி முகந்துகருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்துஉருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.

9

ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறைஅளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்துஅளிக்கும் கலைகளி னால்அறு பத்துஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

10

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.

11

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லைகன்னியைக் கன்னியே காதலித் தானே.

12

கண்டகனவு ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்றுஉண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்பண்டைய தாகிப் பரந்த வியாக்கிரத்துஅண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே.

13

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்துஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனைகன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.
சொற்பிரிப்பு
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்துஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனைகன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே
உரை

உரை எழுதப்படவில்லை

14

தானம் இழந்து தனிபுக்கு இதயத்துமானம் அழிந்து மதிகெட்டு மாலாகிஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தின்மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.

15

சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சிகெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சிஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்துவிழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

16

தானத்து எழுந்து தருக்குந் துரியத்தின்வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்கானத்து எழுந்த கருத்தின் தலையிலேஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே.

17

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றதுநாமயம் அற்றது நாம்அறி யோமே.

18

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளேநரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தனபரிய புரவியும் பாறிப் பறந்ததுதுரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

19

மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்வேறாய மாயா தனுகர ணாதிக்குஇங்குஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்துஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

20

உண்ணும்தன் ஊடாடாது ஊட்டிடு மாயையும்அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவதுநண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்துஎண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.

21

அதிமூட நித்திரை ஆணவம் நந்தஅதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னிஇதமான கேவலம் இத்திறம் சென்றுபரமாகா ஐஅவத் தைப்படு வானே.

22

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்நேசாய ஈசனும் நீடுஆண வத்தரைஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

23

மஞ்சொடு மந்தா கினிகுட மாம்எனவிஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதிஎஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே.
சொற்பிரிப்பு
மஞ்சொடு மந்தா கினிகுட மாம்எனவிஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதிஎஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே
உரை

உரை எழுதப்படவில்லை

24

படியுடை மன்னவன் பாய்பரி ஏறிவடிவுடை மாநகர் தான்வரும் போதுஅடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

25

நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்நேரான வாறுஉன்னி நீடு நனவினில்நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்துநேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.