திருமுறை 10 · 10.08.02 · 3

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பண்ணாகும்1 காமம் பயிலும் வசனமும்விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.பா-ம் : 1 பண்ணாரும்
சொற்பிரிப்பு
பண்ணாகும் காமம் பயிலும் வசனமும்விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகண்கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடிஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.
சொற்பிரிப்பு
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகண்கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடிஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

இலையாம் இடையில் எழுகின்ற காமம்முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.
சொற்பிரிப்பு
இலையாம் இடையில் எழுகின்ற காமம்முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்