திருமுறை 10 · 10.08.01 · 16

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

காயப்பை ஒன்று சரக்குப் பலவுளமாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டுகாயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்சத்த பரிச ரூப ரசகந்தம்புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.

3

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதைமருவிய அத்தி வழும்பொடு மச்சைபரவிய சுக்கிலம் பாழாம் உபாதிஉருவ மலால்உடல் ஒன்றென லாமே.

4

ஆரே அறிவார் அடியின் பெருமையையாரே அறிவார் அங்கவர் நின்றதுயாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையையாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

5

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்றநண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே.

6

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்கடந்தொறும் நின்ற கணக்கது காட்டிஅடங்கியே அற்றது ஆரறி வாறே.

7

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியேஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

8

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்கையினில் துல்லியம் காட்டும் உடலையும்ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

9

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்சேய இடம்அண்மை செல்லவும் வல்லதுகாயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டுஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.

10

நாகம் உடல்உரி போலும்நல் அண்டசமாக நனாவில் கானாமறந் தல்லதுபோகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்றுஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே.

11

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளனகண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்பண்டு தொடரப் பரகாய யோகிபோல்பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.

12

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

13

ஞானிக்குக் காயம் சிவமே தனுவாகும்ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

14

விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனுஎஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்பஅஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

15

மலமென்று உடம்பை மதியாத ஊமர்தலமென்று வேறு தரித்தமை கண்டீர்நலமென்று இதனையே நாடி இருக்கில்பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.

16

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்மெல்ல விளையாடும் விமலன் அகத்திலேஅல்ல செவிசத்த மாதி மனத்தையும்மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.