திருமுறை 10 · 10.07.38 · 19

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவிஇறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.
சொற்பிரிப்பு
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவிஇறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே
உரை

உரை எழுதப்படவில்லை

2

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையைவல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையைஇல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறைநல்ல அரநெறி நாடுமின் நீரே.

3

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமனில்லை நாணாமேசென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்துநின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.

4

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனைநாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டுகூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே.

5

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்றுஅக்காலம் உன்ன அருள்பெற லாமே.

6

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்சாகின்ற போதும் தலைவனை நாடுமின்ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

7

பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.

8

கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்குநீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

9

விடுகின்ற சீவனார் மேல்எழும் போதுநடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

10

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனைஅன்புறு வீர்தவம் செய்யுமெய்ஞ் ஞானத்துப்பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்றுதுன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.

11

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டுமேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டுமேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டுமேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.

12

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

13

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையைஎத்தனை காலமும் ஏத்துவர் ஈசனைநெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்அத்தகு சோதி அதுவிரும் பாரே.

14

நியமத்த னாகிய நின்மலன் வைத்தஉகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

15

இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனைவிஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னைநஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.

16

பஞ்சமும் ஆம்புவி சற்குருபால்முன்னிவஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மைஅஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

17

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லைஅவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்குருவை வழிபடின் கூடலும் ஆமே.

18

நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்கருமங்க ளாலே கழிதலில் கண்டுகுருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.

19

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புறமேற்கொண்டவர்வினை போயற நாடொறும்நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.ஏழாம் தந்திரம் முற்றிற்று
சொற்பிரிப்பு
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புறமேற்கொண்டவர்வினை போயற நாடொறும்நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்