திருமுறை 10 · 10.07.25 · 8

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்துஅந்த அபரம் பரநாத மாகியேவந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்துஉந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்குஉள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.

3

தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்மூவர் பிரான்என முன்னொரு காலத்துநால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.

4

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தைமையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறுசெய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.

5

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்கஅனித்திடும் மேலை அருங்கனி ஊறல்கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

6

நேரறி வாக நிரம்பிய பேரொளிபோரறி யாது புவனங்கள் போய்வரும்தேரறி யாத திசையொளி யாயிடும்ஆரறி வாரிது நாயக மாமே.

7

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

8

நாபிக்கண் நாசிநயன நடுவினும்தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்மூவரு மாக உணர்ந்திருந் தாரே.
சொற்பிரிப்பு
நாபிக்கண் நாசிநயன நடுவினும்தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்மூவரு மாக உணர்ந்திருந் தாரே
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்