திருமுறை 10 · 10.07.26 · 4

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்ஒன்றும் இருசுட ராம்அரு ணோதயம்துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்துஅடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

3

தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்தானே வெளியொளி தானிருட் டாமே.

4

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்வையம் புனல்அனல் மாருதம் வானகம்சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.