திருமுறை 10 · 10.07.17 · 10

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நாலேழு மாறவே நண்ணிய முத்திரைபாலான மோன மொழியில் பதிவித்துமேலான நந்தி திருவடி மீதுய்யக்கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

துரியங்கள் மூன்றுஞ் சொருகிட னாகிஅரிய உரைத்தாரம் அங்கே அடக்கிமருவிய சாம்பவி கேசரி உண்மைபெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

3

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரைஓம்பயில் ஓங்கிய உண்மைய கேசரிநாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.

4

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்டமோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

5

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரேஆக்கும் அச் சுத்தத்தை யார்அறி வார்களே.

6

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்ஆகத் தகும்வேத கேசரி சாம்பவியோகத்துக் கேசரி யோகமுத் திரையே.

7

யோகிஎண் சித்தி அருளொலி வாதனைபோகி தண் புத்தி புருடார்த்த நன்னெறிஆகும்நன் சத்தியும் ஆதார சோதனைஏகமும் கண்டொன்றில் எய்தநின் றானே.

8

துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மைநவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.

9

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரைஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரைதேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரைகானிக்கும் முத்திரை கண்ட சமயமே.

10

தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்மேல்நெறி கண்டது வெண்மதி மேதினிநீநெறி கண்டுள நின்மலன் ஆமே.