திருமுறை 10 · 10.07.16 · 6

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டுஉச்சிக்கு முன்னே உழவு சமைந்ததுஅச்சம்கெட்டு அச்செயல்1 அறுத்துண்ண மாட்டாதார்இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.பா-ம் : 1 செய் அறுத்து
சொற்பிரிப்பு
விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டுஉச்சிக்கு முன்னே உழவு சமைந்ததுஅச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.

3

பரந்துலகு ஏழும் படைத்த பிரானைஇரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்நிரந்தர மாக நினையும் அடியார்இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.

4

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்பொரஇருந் தான்புக லேபுக லாகவரஇருந் தால்அறி யான்என்ப தாமே.

5

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

6

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்கையகம் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்ஐயம் புகாமல் இருந்த தவசியர்வையகம் எல்லாம் வரஇருந்தாரே.