திருமுறை 10 · 10.07.13 · 11

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகாநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்துஉண்டது மூன்று புவனமும் உண்டதுகொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்றுஎண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறைஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானதுமூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

4

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்குநிகரில்லை என்பது நிச்சயம் தானே.

5

ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலைபேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

6

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்றுவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.
சொற்பிரிப்பு
ஏறுடையாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் ஏறுடை தேவர்கள்ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்றுவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்டபேர்நந்தி என்னும் பிறங்கு சடையனைநான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.

8

அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்பழுது படாவண்ணம் பண்பனை நாடித்தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே.

9

பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழிஅகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே

10

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

11

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே.