திருமுறை 10 · 10.07.12 · 10

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்வானுற மாமலர் இட்டு வணங்கினும்ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லதுதேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

3

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனைஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்சேவடி சேரல் செயலறல் தானே.

4

உச்சியும் காலையும் மாலையும் ஈசனைநச்சுமின் நச்சி நமவென்று நாமத்தைவிச்சிமின் விச்சி விரிசுடர் மூன்றினும்நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.
சொற்பிரிப்பு
உச்சியும் காலையும் மாலையும் ஈசனைநச்சுமின் நச்சி நமவென்று நாமத்தைவிச்சிமின் விச்சி விரிசுடர் மூன்றினும்நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே
உரை

உரை எழுதப்படவில்லை

5

புண்ணிய மண்டலம் பூசைநூ றாகுமாம்பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.

6

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடைவந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடைவந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

7

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தேசிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டுநந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

8

மனபவ னங்களை மூலத்தான் மாற்றிஅனித உடல்பூத மாக்கி அகற்றிப்புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.

9

பகலும் இரவும் பயில்கின்ற பூசைஇயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்பகலும் இரவும் பயிலாத பூசைசகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

10

இராப்பகல் அற்ற இடத்தே இருந்துபராக்குஅற ஆனந்தத் தேறல் பருகிஇராப்பகல் அற்ற இறையடி இன்பத்துஇராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.