திருமுறை 10 · 10.07.09 · 22

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இருபத மாவது இரவும் பகலும்உருவது ஆவது உயிரும் உடலும்அருளது ஆவது அறமும் தவமும்பொருளது உள்நின்ற போகமது ஆமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.

3

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

4

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறைஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

5

தானே அறியும் வினைகள் அழிந்தபின்நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்தேனே யனையன் நம் தேவர் பிரானே.

6

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனைவான்அறிந் தார் அறி யாது மயங்கினர்ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்தான்அறி யான்பின்னை யார்அறி வாரே.

7

அருள்எங்கு மான அளவை அறியார்அருளை நுகர்அமு தானதும் தேரார்அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே.

8

அறிவில் அணுக அறிவது நல்கிப்பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டுஅறிவது ஆக்கி அடியருள் நல்கும்செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.

9

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டுஅருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டுஅருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டிஅருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

10

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டிஅருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டுஅருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டிஅருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

11

பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.

12

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்மறவா அருள் தந்த மாதவன் நந்திஅறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே.

13

அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலேஅகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்குஅகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.

14

ஆயும் அறிவோடு அறியாத மாமாயைஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்ஆய பலஇந் திரியம் அவற்றுடன்ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே.

15

அருளே சகலமும் ஆய பவுதிகம்அருளே சராசர மாய அமலமேஇருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே.

16

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்துதவமான ஐம்முகன் ஈசன் அரனும்பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறாநவம்அவை யாகி நடிப்பவன் தானே.

17

அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றாஅருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனேஇருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே.

18

தானே படைத்திடும் தானே அளித்திடும்தானே துடைத்திடும் தானே மறைத்திடும்தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்தானே வியாபித் தலைவனும் ஆமே.

19

தலையான நான்கும் தனதுஅரு வாகும்அலையா அருவுரு வாகும் சதாசிவம்நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே.

20

ஒன்றது வாலே உலப்பிலி தானாகிநின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலைதுன்றி அவைஅல்ல வாகும் துணையென்னநின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே.

21

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடுஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டுவீயத் தகாவிந்து வாக விளையுமே.

22

விளையும் பரவிந்து தானே வியாபிவிளையும் தனிமாயை மிக்கமா மாயைகிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.