திருமுறை 10 · 10.06.08 · 6

திருச்சிற்றம்பலம்

ஆறாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடைஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்மான நலங்கெடும் (1) அப்புவி யாதலால்ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.(1) வையகம் பஞ்சமாம்
சொற்பிரிப்பு
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடைஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்மான நலங்கெடும் அப்புவி யாதலால்ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ளநன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்மன்பதை செப்பஞ் செயின்வையம் வாழுமே.

4

இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்தவழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

5

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே.

6

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாகமெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.