திருமுறை 10 · 10.06.07 · 10

திருச்சிற்றம்பலம்

ஆறாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டுபிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்உமிழ்வது போல உலகந் திரிவார்அவிழு மனமும்எம் ஆதியறிவுந்தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே.

3

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.

4

முன்னின் றருளு முடிகின்ற காலத்துநன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

5

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்சிவனரு ளால்வினை சேரகி லாமைசிவனருள் கூடின்அச் சிவலோக மாமே.

6

புண்ணியன் எந்தை புனிதன் இணையடிநண்ணி விளக்கென ஞானம் விளைந்ததுமண்ணவ ராவதும் வானவர் ஆவதும்அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

7

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்டமாயத்தே ரேறி மயங்கு மவையுணர்நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்ஆயத்தே ரேறி யவனிவ னாமே.

8

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்அவ்வுல கத்தே யரனடி கூடுவர்அவ்வுல கத்தே யருள்பெறு வாரே.

9

கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே.

10

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்றுகூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்லவீடும் அளவும் விடுகின் றிலேனே.