திருமுறை 10 · 10.06.09 · 4

திருச்சிற்றம்பலம்

ஆறாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தவமிக் கவரே தலையான வேடர்அவமிக் கவரே யதிகொலை வேடர்அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

பூதி யணிவது சாதன மாதியிற்காதணி தாம்பிர குண்டலங் கண்டிகைஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.

3

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளிதோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்றாகத்து நீறணி யங்கக் கபாலஞ்சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

4

காதணி குண்டலங் கண்டிகை நாதமும்ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரைஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே.