திருமுறை 10 · 10.05.19 · 7

திருச்சிற்றம்பலம்

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறுசமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதியமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடிதாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

3

இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்வருந்தா வகைசெய்து வானவர் கோனும்பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

4

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்பாரறி வாளர் படுபயன் றானுண்பர்காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்நீரறி வார்நெடு மாமுகி லாமே.

5

அறிவுடன் கூடி அழைத்தோர் தோணிபறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்குறியது கண்டுங் கொடுவினை யாளர்செறிய நினைக்கிலர் சேவடி தானே.

6

மன்னும் ஒருவன் மருவு மனோமயன்என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்துன்னி மனமே தொழுமின் துணையிலிதன்னையும் அங்கே தலைப்பட லாமே.

7

ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.