திருமுறை 10 · 10.05.20 · 16

திருச்சிற்றம்பலம்

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்அமைய வகுத்தவன் ஆதி புராணன்சமயங்க ளாறும்தன் றாளிணை நாடஅமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஒன்றது பேரூர் வழியா றதற்குளஎன்றது போல இருமுச் சமயமும்நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.

3

சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னைஉய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியைமெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

4

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்பவனவன் வைத்த பழிவழி நாடிஇவனவன் என்ப தறியவல் லார்கட்கவனவ னங்குள தாங்கட னாமே.

5

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே.

6

அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்(1)சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.(1) சிவநெறி, சிரநெறி
சொற்பிரிப்பு
அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்சிரநெறி தேடித் திரிந்தஅந் நாளும்உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறிபேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழிஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறிபோந்து புனைந்து புணர்நெறி யாமே.

8

ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியேவாரு மரநெறி மன்னியே முன்னியத்தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.

9

மினற்குறி யாளனை வேதியர் வேதத்தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னைநினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தினயக்குறி காணில் அரநெறி யாமே.

10

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பலவாய்ந்துண ராவகை நின்ற அரனெறிபாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழுதேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.

11

சைவ சமயத் தனிநா யகன்நந்திஉய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டுதெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்யவையத் துளார்க்குவகுத்துவைத் தானே.

12

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்திஎத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.

13

ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்ஆமே பிரானுக் கதோமுக மாறுளதாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

14

ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்பேதிப் பிலாமையின் நின்ற பராசத்திஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே.

15

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறிஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.

16

அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனைஅறியவொண் ணாத அறுவகை யாக்கிஅறியவொண் ணாத அறுவகைக் கோசத்தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.ஐந்தாம் தந்திரம் முற்றிற்று
சொற்பிரிப்பு
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனைஅறியவொண் ணாத அறுவகை யாக்கிஅறியவொண் ணாத அறுவகைக் கோசத்தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்