திருமுறை 10 · 10.05.18 · 20

திருச்சிற்றம்பலம்

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலாமாயக் குழியில் விழுவர் மனைமக்கள்பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்வள்ளல் தலைவன் மலருறை மாதவன்பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

3

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறைஉள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

4

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்ஆறு சமயப் பொருளும் அவனலன்தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்மாறுதல் இன்றி மனைபுக லாமே.

5

சிவமல்ல தில்லை யறையே சிவமாந்தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)அவமல்ல தில்லை அறுசம யங்கள்தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.

6

அண்ணலை நாடிய ஆறு சமயமும்விண்ணவ ராக மிகவும் விரும்பியேமுண்ணின் றழியு முயன்றில ராதலான்மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

7

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்பவகதி பாசப் பிறவியொன் றுண்டுதவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்அவகதி மூவரும் அவ்வகை யாமே.

8

நூறு சமயம் உளவா நுவலுங்கால்ஆறு சமயமவ் வாறுட் படுவனகூறு சமயங்கன் கொண்டநெறிநில்லாஈறு பரநெறி யில்லா நெறியன்றே.

9

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்சுத்த சிவமெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.

10

மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சிஇயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.

11

சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்திதூயன் துளக்கற நோக்கவல் லார்கட்குமாயன் மயக்கிய மானுட ராமவர்காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.

12

வழியிரண் டுக்குமோர் வித்தது வானபழியது பார்மிசை வாழ்தல் உறுதல்சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்றழிவறி வார்நெறி நாடநில் லாரே.

13

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்நாதம தாக அறியப்படுநந்திபேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.

14

அரநெறி யப்பனை யாதிப் பிரானைஉரநெறி யாகி யுளம்புகுந் தானைப்பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

15

பரிசறி வானவன் பண்பன் பகலோன்பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்துரிசற நீநினை தூய்மணி வண்ணன்அரிதவன் வைத்த அறநெறி தானே.

16

ஆன சமயம் அதுஇது நன்றெனும்மாய மனிதர் மயக்க மதுவொழிகானங் கடந்த கடவுளை நாடுமின்ஊனங் கடந்த வுருவது வாமே.

17

அந்நெறி நாடி அமரர் முனிவருஞ்செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

18

உறுமா றறிவதும் உள்நின்ற சோதிபெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லைஅறுமா றதுவான வங்கியு ளாங்கேஇறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

19

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

20

வழிசென்ற மாதவம் வைகின்ற போதுபழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கேவழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.