1
சொற்பிரிப்பு
உரை
விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபெருமானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று தன் நாவினில் பொருந்திய கலைமகளுடன் இணைந்து நான்முகனான பிரமன் சிறந்த அன்போடு வழிபட்ட கோயில் திருக்கழுமலம் ஆகும். இங்குள்ள வாவிகளில் மலரும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களைப் போலவும், செம்மையான குமுத மலர்கள் அவர்களின் வாய்களைப் போலவும் காவி மலர்கள், கருங்குவளை மலர்கள் மற்றும் கரிய நெய்தல் மலர்கள் ஆகிய இவைகள் அவர்களின் கண்களைப் போலவும் தோன்றி மலரும் வளத்தை உடையது கழுமலம் ஆகும்.