திருமுறை 1 · 1.127 · 12

திருச்சிற்றம்பலம்

சீகாழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
வியாழக்குறிஞ்சி
தலம்
சீர்காழி - பல்பெயர்ப்பத்து
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
சொற்பிரிப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
உரை

ஞானமயமாக விளங்கும்‌ பராசக்தியான பரிபூரணத்தை மிக வியந்து, அந்தப்‌ பராசக்திக்கும்‌ பரமானந்த வடிவினனாக இருப்பவன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. அவன்‌ முதல்‌, நடு, இறுது காண இயலாத பெரியோன்‌ ஆவான்‌. இப்பெருமான்‌, மேல்‌ நிலமாகிய ஆகாயத்தின்௧ண்‌ ஓடும்‌ கங்காதேவியை விரும்பித்‌ திருமுடியில்‌ வைத்திருப்பவன்‌. மேலும்‌ அவன்‌ எம்மைவிட்டு நீங்காத நிலைமையை உடைய எமது உயிரில்‌ பிரம்ம ரூபத்தில்‌ எண்ணப்பட்ட என்னை முத்து விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவன்‌. என்னை ஓக்க வந்தவன்‌. அவனே பிரமபுரம்‌ என்ற சீகாழிப்‌ பதியில்‌ வீற்றிருக்கும்‌ கர்த்தாவான எனது சுவாமி ஆவார்‌.

2

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.
சொற்பிரிப்பு
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.
உரை

எட்டுத்‌ திக்குகளிலும்‌ உள்ள பர்வதங்களுள்‌ ஒலிசிறந்த தரிசனை மணியாகவும்‌, அகில உலகங்களையும்‌ தன்னுள்‌ அகப்படுத்தும்‌ தன்மையுள்ளதும்‌,பெரிதாகவும்‌ உள்ள திருச்சிலம்பினைத்‌ தரித்துள்ளவன்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌ திருமாலின்‌ சிவதூஷணத்தைக்‌ கேட்ட அசுரர்களின்‌ முப்புரங்களைச்‌ சங்கரித்தவன்‌. கற்பகப்‌ பூஞ்சோலை மலர்‌ கொண்டு தேவர்களது அர்ச்சனை செய்யும்‌ சோலைகள்‌ சூழ்ந்ததும்‌, தேவேந்திரன்‌ மூங்கில்‌ வழியாக வந்து பூசித்ததால்‌ வேணுபுரம்‌ என்ற பெயரை உடையதுமான சீகாழியில்‌ வீற்றிருக்கும்‌ இறைவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌.

3

புண்டரி கத்தவன் மேவிய புகலியேபுண்டரி கத்தவன் மேவிய புகலியேபுண்டரி கத்தவன் மேவிய புகலியேபுண்டரி கத்தவன் மேவிய புகலியே.
சொற்பிரிப்பு
புண்டரி கத்தவன் மேவிய புகலியேபுண்டரி கத்தவன் மேவிய புகலியேபுண்டரி கத்தவன் மேவிய புகலியேபுண்டரி கத்தவன் மேவிய புகலியே.
உரை

என்‌ இதயக்‌ கமலத்தில்‌ வீற்றிருந்து இடைவிடாத ஆனந்தம்‌ அருளி என்னை மலபோகத்தில்‌ தள்ளாமல்‌ காத்தருளி எனக்கு அடைக்கலம்‌ தருபவன்‌. அவனே ஆன்மாக்களை காக்கும்‌ திருநீற்றை அணிந்திருப்பவன்‌. மிகுந்த கருணையான அவன்‌ யான் பாடிய பாடல்களை உவந்து ஏற்றுக்‌ கொள்பவன்‌. புலிக்காலும்‌ புலிக்கையும்‌ கொண்ட வியாக்கிரபாத முனிவருக்கு ஞான ஆனந்த நடனத்தைக்‌ கனக சபையில்‌ ஆடும்‌ வித்தையைக்‌ கற்றவன்‌. இந்த அற்புதங்களைச்‌. செய்யும்‌ சிவபெருமான்‌ பெரும்‌ விருப்பத்துடன்‌ எழுந்தருளியுள்ள தலமானது, பிரமன்‌ பூசித்த புகலி என்ற சீகாழியாகும்‌.

4

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
சொற்பிரிப்பு
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
உரை

கன்றாகவும்‌, விளாமரமும்‌ ஆக நின்ற அரக்கர்களை கன்றால்‌ விளாமரத்தை எறிந்து அந்த அரக்கர்களை அழித்தவன்‌ திருமால்‌. அந்த மாலை மேனியில்‌ ஒரு பாகத்தில்‌ வைத்தவன்‌. உருமு என்னும்‌ இடியாக வந்து உலகை ஆள்பவன்‌. தனது பரிபூரணத்தில்‌ இருந்து தன்னை இழந்து வேறுபட்டு நிற்கின்ற கீழாயினவனான எனக்கும்‌ குருமூர்த்தியாக வந்து எனது பிறவியை ஒழித்தவன்‌. தனது பரிபூரணமான பேரின்பத்தில்‌ எனது அடிமை குலையாமல்‌ இரண்டறக்‌ கலக்க வைத்தவன்‌. இப்பெருமான்‌ எத்தன்மையானவன்‌ என்றால்‌, எங்கும்‌ பிரகாசமாக நிற்கும்‌ கீர்த்தியை உடையவன்‌. இயமனால்‌ பூசிக்கப்பட்ட வெங்குரு என்னும்‌ சீகாழிப்‌ பதியை விரும்பி, அங்கு எழுந்தருளியிருப்பவன்‌.

5

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.
சொற்பிரிப்பு
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.
உரை

சுடுநிலமாகிய மயானத்தை நடமாடும்‌ இடமாகக்‌ கொண்டவன்‌. முப்புரங்களைப்‌ புன்சிரிப்பால்‌ சுட்டு வெற்றியை அடைந்து தும்பை மாலையை அணிந்தவன்‌. என்‌ உச்சிக்குச்‌ சூடாமணியாய்‌ இருப்பவன்‌. ஆன்மாக்களை ஈடேற்றும்‌ பித்துக்‌ கொண்டவன்‌. யாகத்தில்‌ வந்த துதிக்கையினை உடைய யானையின்‌ தோலை உரித்து வடிவிழக்கச்‌ செய்தவன்‌. சூரியனுடைய களங்கத்தைக்‌ கழுவும்‌ கடல்போன்ற பிறவியில்‌ விழுந்த ஆன்மாக்களுக்குக்‌ கரையேறக்கூடிய தெப்பமாக இருப்பது பிரணவ மந்திரம்‌. அந்தப்‌ பிரணவ மந்திரத்தைச்‌ செவியில்‌ உண்டாக்குபவன்‌. ஒளி பொருந்திய நவரத்தினங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள்‌ சூழ்ந்துள்ள திருத்தோணிபுரம்‌ என்ற சீகாழியில்‌ வீற்றிருக்கும்‌ சிவபெருமான்‌ இத்தகைய பெருமைகள்‌ உடையவன்‌ ஆவான்‌.

6

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடிபூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடிபூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடிபூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.
சொற்பிரிப்பு
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடிபூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடிபூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடிபூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி.
உரை

பூமியில் உள்ளாரையும் வானுலகத்தில் உள்ளாரையும் தனது நாபிக் கமலத்தில் இருந்து பிரமன் தோற்றுவித்தான். இந்தப் பிரமன், திருமாலின் ஞானத்தில் கண்ணாடியும் நிழலும் போல் பிரதிபலிக்கும் பிம்பமாக இருப்பவன்‌. மும்மலங்களையும்‌ கழுவிய சிவஞானிகள்‌ பொலிவு பெறுமாறு, அழகுடைய ஆனந்த நடனம்‌ செய்பவன்‌ சிவபெருமான்‌ ஆகும். இப்பெருமான் திருநீறு பூசும்‌ மார்புடைய சிவஞானிகளுக்கும்‌, புண்ணியம்‌ பாவம்‌ என்ற இருவினைகளை அறுத்த சிறப்பினை டையவர்களுக்கும்‌ மூலமாய்‌ உள்ளவன்‌. குற்றமற்ற சான்றோர்கள்‌ வாழும்‌ பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருக்கும் சிவபெருனமானின் அழகிய திருவடி தாமரை என்னை ஆண்டுகொள்ளுவதாக.

7

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.
சொற்பிரிப்பு
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.
உரை

தமது திருவருள்‌ ஞானம்‌ வாய்க்கப்‌ பெறாதார்க்கு மலத்தைக்‌ கெடச்‌ செய்யாத சிவபெருமானுக்கு இருப்பிடம்‌ எனது அறிவே. ஐம்பூதங்களால்‌ உருவான உலகத்தை உண்ட திருமாலின்‌ எலும்பினைத்‌ தன்‌ திருமேனியில்‌ தரித்திருப்பவன்‌ சிவபெருமானாகும்‌. இப்பெருமான்‌ ‘யான்‌’ ‘எனது’ என்னும்‌ செருக்கு அறுமாறு செய்பவன்‌. செருக்கினால்‌ ஆணவ மலம்‌ தோன்ற நின்ற பிரமனின்‌ சிகரத்தை அறுத்தவன்‌. மண்ணுயிர்கள்‌ செருக்குற்று நலியாதவாறு, அவர்‌ தம்‌ சிரசில்‌ பதித்து காத்தருளுபவன்‌. ஆத்தும விசாரமாகிய கர்மத்தில்‌ ஐந்து இந்திரியங்களில்‌ இச்சைகளை அவித்து அழித்தால்‌ சிவபெருமானின்‌ இருப்பிடமான சிவபுரத்தை அடையலாம்‌.

8

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
சொற்பிரிப்பு
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
உரை

அழகுடன்‌ மாய நடனம்‌ புரியும்‌ பத்திர காளியும்‌ பூத பிசாசுகளும்‌ நிறைந்த மயானத்தைத்‌ திருக்கோயிலாகக்‌ கொண்டவன்‌ சிவபெருமானாகும்‌. இப்பெருமான்‌ மகாரிஷிகள்‌ தவம்‌ செய்யும்‌ ஆரணியக்‌ காட்டில்‌ தனித்துத்‌ தவம்‌ புரியும்‌ முனிவன்‌ இவன்‌. அழகிய ஆபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்டு இலக்குமியைப்‌ போன்ற அழகுடைய இருடி பத்தினிகள்‌ பிச்சையிட வந்து அணைந்தபோது பெருமானின்‌ அழகில்‌ மயங்கி தங்கள்‌ கற்பைக்‌ குலைத்தனர்‌. பொன்னால்‌ செய்யப்பட்ட கால்‌ சிலம்புகளை பாதங்களில்‌ அணிந்துள்ள கன்னியர்‌ திரண்டு விளையாடும்‌ புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியில்‌ வாழ்கின்ற பெருமான்‌ இவன்‌ ஆவான்‌.

9

தசமுக னெரிதர வூன்று சண்பையான்தசமுக னெரிதர வூன்று சண்பையான்தசமுக னெரிதர வூன்று சண்பையான்தசமுக னெரிதர வூன்று சண்பையான்.
சொற்பிரிப்பு
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்தசமுக நெறிதர ஊன்று சண்பையான்தசமுக நெறிதர ஊன்று சண்பையான்தசமுக நெறிதர ஊன்று சண்பையான்.
உரை

உயிர்களிடம்‌ தயவுடையவன்‌ அரையிலே அக்கினி வீசுகின்ற விரிந்த படத்தினை உடைய பாம்பை அரைஞானாகக்‌ கட்டி இருப்பவன்‌. சிவஞானிகளின்‌ கூட்டத்திற்கு ‘அது’ என்ற மெய்ப்பொருளைத்‌ தோற்றுவிப்பவன்‌. புலியின்‌ ஊன்பொருந்திய தோல்‌ ஆடையை அரையிலே உடுத்தி இருப்பவன்‌. ஆத்தும அறிவிற்கு எதிரியான அகங்காரம்‌ அழியும்படி எனது அறிவில்‌ எதிர்ப்பட்டவன்‌. கயிலாய மலையில்‌ எழுந்தருளி இருந்து ஆத்துமாக்களை இரட்சிப்பவன்‌. ‘விசேடத்தை உடையது’‌ என்று போற்றும்‌ எல்லாச்‌ சமயங்களுக்கும்‌, அதற்கு ஏற்றபடி அருளுபவன்‌. பத்துத்‌ தலைகளை உடைய இராவணன்‌ நெரியும்படி திருவிரலால்‌ அடர்த்தவன்‌ யாரென்றால்‌ சண்பை என்னும்‌ சீகாழியில்‌ வீற்றிருக்கும்‌ சிவபெருமானே அவன்‌.

10

காழி யானய னுள்ளவா காண்பரேகாழி யானய னுள்ளவா காண்பரேகாழி யானய னுள்ளவா காண்பரேகாழி யானய னுள்ளவா காண்பரே.
சொற்பிரிப்பு
காழி ஆனய உள்ளவா காண்பரேகாழி ஆனய உள்ளவா காண்பரேகாழி ஆனய உள்ளவா காண்பரேகாழி ஆனய உள்ளவா காண்பரே.
உரை

நிலைபெற்ற நிர்மலமான சத்தத்தை உடைய பக்தர்களுக்கு சத்தியப்‌ பொருள்‌ விளையும்‌ பொருட்டு அருட்கண்ணால்‌ நோக்குபவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. நீலகண்டனின்‌ கருணையை நினைத்து ஞானமார்க்கத்தை விரும்பும்‌ சிவஞானிகள்‌, “தங்களின்‌ ஆணவ மலம்‌ அழிக்கப்படுவதே சிவபெருமானின்‌ விருப்பம்‌” என்பதை தங்களின்‌ அறிவிலே கருதுவார்கள்‌. திருமாலும்‌ பிரம்மாவும்‌ திருவடியும்‌ திருமுடியும்‌ காணும்‌ பொருட்டு வராக உருவமும்‌ அன்னத்தின்‌ உருவமாகவும்‌ வடிவு கொண்டனர்‌. அவர்கள்‌ கருதியபடி சிவபெருமானைக்‌ காண முடியவில்லை. அன்னியமே கண்டனர்‌. என்‌ பொருட்டு காழி என்னும்‌ திருப்பதியைப்‌ படைத்தவனை என்‌ ஐயனை, எனது ஆசையை, அவர்கள்‌ இருவரும்‌ தேடி மறத்தல்‌ ஒழிந்து எவ்வாறு காண்பர்‌?

11

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரேகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரேகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரேகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.
சொற்பிரிப்பு
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரேகொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரேகொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரேகொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே.
உரை

ஆணவ மலத்தோடு கூடிய மயக்கத்தை வென்றவர்கள்‌ பிறவி பெறமாட்டார்கள்‌. புலால்‌ நாற்றமுடைய அழுக்கு உடம்பை பொய்‌ என்று கருதாமல்‌ அதுவே தமது நிலைபெற்ற உருவம்‌ என்று எண்ணி துவர்‌ ஆடையால்‌ மூடும்‌ உடம்பை பெளத்தர்களும்‌, மூடாத சமணர்களும்‌ சிவபெருமானை அணுகார்‌. பேதைத்‌ தன்மை உடையதும்‌, மீன்‌ நாற்றமும்‌ உடைய மச்சகந்தியின்‌ உடம்பை விரும்பி, அவளுடைய சரீரத்தைச்‌ சுகந்த மணம்‌ வீசும்படி செய்து, பராசரன்‌ அவளைப்‌ பொருந்தினான்‌. பராசர முனிவரால்‌ பூசிக்கப்பட்டதால்‌ கொச்சை என்ற பெயரைக்‌ கொண்ட சீகாழிப்‌ பதியில்‌ எழுந்தருளியிருப்பவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இந்தத்‌ தலைமையான பெருமானை உள்ளபடி தரிசனம்‌ செய்து வழிபட மாட்டார்கள்‌. நினைவு எவ்வாறு இருக்கும்‌ எனில்‌ அது, மழைக்காலத்து இருளையும்‌ வெளிச்சம்‌ என்று மயங்கி நிற்கும்‌ இருண்ட மயக்கத்தை உடைய நினைவாக இருக்கும்‌.

12

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரைகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரைகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரைகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.
சொற்பிரிப்பு
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரைகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரைகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரைகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.
உரை

மிகுதிப்பட்ட தோஷமாக உள்ள சுக்கிலம்‌ மற்றும்‌ சுரோணிதம்‌ என்ற நீரினால்‌ பூமியில்‌ உன்ள எல்லா உயிர்களும்‌, பிறந்து, வளர்ந்து பின்பு தேய்ந்து மரிக்கின்றன. இந்தப்‌ பிறப்புக்களைக்‌ கொண்ட ஜென்மங்களை மலம்‌ அறுத்து, கழுவி அருள்பவர்‌ சிவபெருமான்‌ ஆவான்‌. இப்பெருமான்‌ தனது பாதியாகிய திருவருளால்‌ என்னைச்‌ சுவீகரித்து, அந்த அருள்வழியாக என்னில்‌ இடையறாது வாழ்கின்றனர்‌. தம்மை எனக்குத்‌ தந்த அடிமை குலையாமலும்‌ என்னை விட்டு விலகாத கருத்தரும்‌ அவரே. மாயா மயக்கத்தில்‌ மூழ்கி, பந்தம்‌ எது, முத்தி எது என்று இரண்டுமே தெரியாமல்‌ திண்டாடும்‌ உயிர்களுக்கு அமுதம்‌ போன்று அரியவனாக இருக்கின்றான்‌. பொன்னைப்‌ போன்ற ஒளி உருவினனாக சிருஷ்டிக்குக்‌ கருத்தாவான பிரம்மனின்‌ கபாலத்தில்‌ பிச்சை கொண்டு நுகரும்‌ கருணையாளன்‌ அவன்‌. திருக்கழுமலம்‌ என்ற பழமையானதும்‌ பன்னிரு பெயர்‌ கொண்டதுமான அனாதிமூலமாகிய பதி சீகாழி. இதில்‌ கவுணிய கோத்திரத்தில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ கடவுளுக்குப்‌ படைக்கும்‌ அமுதமாக வெளிப்படுத்திய இப்பதிகப்‌ பாடல்களை மலத்தில்‌ அழுந்தாத ஒருவராகிலும்‌, பலராகிலும்‌ உரை செய்பவர்கள்‌ உயர்ந்த நிலையை அடைவது உறுதி. ஆதலால்‌ இடைவிடாது உரை செய்வீர்களாக.

திருச்சிற்றம்பலம்