1
சொற்பிரிப்பு
உரை
வினைவயத்தால் பந்தப்பட்டு மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி, அவ்விடமே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், காடுகளில் வாழும் முனிவர்களும் தங்கள் மனத்தால், சிவபெருமானாரை ஆழ்ந்து தியானிக்கின்றனர். இப்பெருமான் சிலம்பினை அணிந்துள்ள உமையம்மையுடன் நாளும் நாளும் நீண்டு உயர்ந்த திருக்கயிலை மலையில் எழுந்தருளுகின்றார். இந்தத் திருக்கோலக் காட்சிகளைப் பெருங்கருணையோடு இப்பெருமான் அருளுவது எதற்கு என்றால், இவ்வுலகத்து மக்கள் தங்கள் கண்களால் நேரிலேயே தம்மைக் காணும் சிறப்பினைப் பெறுவதற்காகவே! இந்தக் காட்சியைக் கண்டு தாம் எடுத்தப் பிறவியின் பயனை அடைந்து தகவினைப் புரியும் இறைவனது இடம் எது என்றால், அது, வளமையான கழுமலம் என்ற சீகாழிப்பதி ஆகும். இந்த நகரம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களை உடைய சந்தனக் காடுகள் நிறைந்து செழிக்கும் புகழ் பெற்ற நகரமாகும்.