1
சொற்பிரிப்பு
உரை
பிரகாசிக்கும் ஒளியை உடைய மாணிக்க மணியை உமிழும் நாகத்தைச் சிவபெருமான் தனது அரையில் பொருந்தக் கட்டியுள்ளார். இவர், இருபுறங்களிலும் மணிகள் தொங்குகின்ற யானையின்மீது ஏறாமல், இடபத்தின்மீது ஏறி வருபவர். நஞ்சை உண்ட கண்டத்தை உடையவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ள உயர்ந்த சிகரங்களை உடையதும், ஆங்காங்கே மணிகள் போலத் தோன்றும் ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.