1
சொற்பிரிப்பு
உரை
அழகு மிகுந்த மாடவீடுகளைக் கொண்ட பெருமை மிக்க பிரமபுரத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான் கொடிய விடம் கொண்ட அரவத்தை ஆபரணமாகக் கொண்டவர். சுடுகாட்டை இருப்பிடமாக உடையவர். அழகிய காதில் தோடு அணிந்தவர். திருப்பாதத்தில் சிலம்பு அணிந்தவர். வேடுவர் உருவம் கொண்டு அருச்சுனனுக்குப் பாசுபதக் கணை அளித்தவர். இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.