1
சொற்பிரிப்பு
உரை
நாம் முற்பிறவிகளில் சேர்த்து வைத்த சஞ்சித கர்ம வினைகளுக்கு ஈடாகவே இப்பிறவியில் பிறந்து பிராரர்த்த வினையின்படி இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றோம்' என்று சொல்லப்படுவதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவ்வினைகளில் இருந்து விடுதலை பெறும் வழியை நீங்கள் முயற்சி செய்து தேடாமல் இருப்பது உங்களுடைய பெருங்குறை அல்லவா? நாம் அனைவரும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சிவப்பணிகளையும், திருத்தொண்டுகளையும் செய்து, சிவபெருமானின் திருவடியைப் போற்றுவோம். அப்படிச் செய்தால் சஞ்சித வினைகள் அழிந்து விடும். இனிவரும் ஆகாமிய வினைகளும் நம்மை வந்து அணுகா. இது நீலகண்டனான சிவபெருமான்மீது கூறும் ஆணையாகும். (பிராரர்த்த வினையை இந்தப் பிறவியில் அவரவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அதை நீக்கமாட்டார்.