1
சொற்பிரிப்பு
உரை
ஒளிவீசும் சங்கு வளையல்களை முன் கைகளில் அணிந்துள்ள முனிபன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு ஏற்றுக் கொள்பவன். சினம் பொங்கும் பாம்பைப் பிடித்து ஆடுபவன். உலக மக்கள் உயர்வு பெற எங்கும் நிறைந்திருப்பவனான சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும்.