1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் குருந்த மரத்தடியில் குருவாக நின்றவன். எப்போதும் இளமையாக இருப்பவன். பேரறிவுடையவன். பெருந்தன்மை உடையவன். பெண் மற்றும் ஆண் வடிவோடு விளங்குபவன். தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவன். பிறவிப் பிணியைப் போக்கும் அரிய மருந்தாக விளங்குபவன். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.