1
சொற்பிரிப்பு
உரை
தமக்கு நிகரில்லாத வலிய அசுரர்களின் கோட்டைகளாக விளங்கிய முப்புரங்களும் சாம்பலாகிப் போகுமாறு, முற்காலத்தில் ஒருவெங்கணையால் அழித்த நிமலன், எங்கள் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் எழுந்தருளிய இடம் யாது என வினவினால், அது, தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல் மீன்கள் பாயும் வயல்களும் சூழ்ந்த திரு ஊறல் ஆகும். இப்பெருமானின் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை நாம் நாள்தோறும் தியானிப்போமாக.