1
சொற்பிரிப்பு
உரை
திருவாரூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவனான சிவபெருமான் நான்கு வேதங்களை அருளியவன். எஞ்ஞான்றும் எவ்வகையிலும் ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை, வலது கரத்தில் ஏந்தித் தன் பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிகுந்த நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடனம் ஆடுபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.(மார்கழித் இருவாதிரை நாள் மற்றும் பங்குனி உத்திரத் திருநாள் இரண்டும்) தியாகேசப் பெருமானுடை!! திருவடிக் காட்சி எய்தும் நாள் - அப்பர் தேவாரம்