1
சொற்பிரிப்பு
உரை
ஒரு காதில் தோடும் மற்றொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கப் பெற்றவன். தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண்கலனாகக் கொண்டிருப்பவன். இரந்து உண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். இத்தகைய இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் இடம் திருக்கழுக்குன்றம் ஆகும்.