திருமுறை 9 · 9.016 · 11

திருச்சிற்றம்பலம்

தஞ்சை இராசராசேச்சரம்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
தஞ்சை இராசராசேச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிர கோடிஅலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம்பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள்இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
சொற்பிரிப்பு
உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பரிதி ஒன்று நூறாயிர கோடிஅலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம்பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர் வெண்திங்கள்இலைகுலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன இல்லைமற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற் றிடுபுனல் மதகில்வாழ் முதலைஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
நெற்றியில் கண் என் கண்ணின் நின்று அகலா நெஞ்சினில் அஞ்சிலம்பு அலைக்கும்பொற்றிருவடி என் குடி முழுதாளப் புகுந்தன போந்தனவில்லைமற்றெனக்கு உறவு என் மறிதிரை வடவால் இடுபுனல் மதகில் வாழ் முதலைஎற்றுநீர்க் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக்குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிணர் அனையகுடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
சடை கெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக்குடைநிழல் விடைமேல் கொண்டு உலாப்போதும் குறிப்பெனோ கோங்கிணர் அனையகுடை கெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து உக்க செஞ்சுடர்ப்படு குவையோங்குஇடைகெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்தசூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக்காழகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழுமயாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
வாழி அம்போதத்து அருகுபாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்தசூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக்காழ் அகில் கமழு[ம்] மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழுமயாழொலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத்தவரும்மா லவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர்உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
எவருமா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திருக்கமலத்துஅவரும் மாலவனும் அறிவரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர்உவரி மாகடலின் ஒலிசெய் மாமறுகில் உறுகளிற்று அரசினது ஈட்டம்இவரு மால்வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள அடிகள்தம் அழகிய விழியும்குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ(து) அழகோதரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில்இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும்குருளும் வார்காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோதரள வான் குன்றில் தண்ணிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில்இருளெலாங் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும் நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னோசுனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும்எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர் இறப்பு இலையுதிர்வு என்றால்நினைப்பரும் தம்பாற் சேறல் இன்றேனும் நெஞ்சிடிந்து உருகுவ தென்னோசுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச் சூழல் மாளிகை சுடர் வீசும்எனைப் பெருமணஞ்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்கஎன்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலைஇன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித்து இருக்கஎன்னெடுங் கோயில் நெஞ்சு வீற்று இருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்மின்னெடும் புருவத்து இளமயில் அனையார் விலங்கல் செய் நாடக சாலைஇன்னடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதிர் அனையர் வாழியரோ !பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார்;அங்கழற் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர்கதிர் அனையர் வாழியரோபொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல் துளும்பு அவிர்சடை மொழுப்பர்எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தனியர்எத் தனைஓ ராயிர வருமாம் தன்மையர் என்வயத் தினராம்கனியரத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆ ரமிர்தர்புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
சொற்பிரிப்பு
தனியர் எத்தனை ஓராயிர வருமாம் தன்மையர் என்வயத்தினராம்கனியர்அத் தரு தீங்கரும்பர் வெண்புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர்புனிதர் பொற்கழலர் புரிசடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்குஇனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின்இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவரைஅருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும் பொன்நெடுங் குன்றுடை யோரே.
சொற்பிரிப்பு
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின்இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவரைஅருமருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொன்மாலை ஈரைந்தின்பொருள் மருந்து உடையோர் சிவபதமென்னும் பொன்னெடுங் குன்றுடையோரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்