திருமுறை 9 · 9.015 · 10

திருச்சிற்றம்பலம்

திருச்சாட்டியக்குடி

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
சாட்டியக்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்துசரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார்இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
சொற்பிரிப்பு
பெரியவா கருணை இளநிலா வெறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்துசரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார்இருகை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம் பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெரும் தேவிசாந்தமும் திருநீ(று) அருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார்ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
சொற்பிரிப்பு
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர்வார்ந்த கண் அருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெரும் தேவிசாந்தமும் திருநீறு அருமறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார்ஏந்தெழில் இதயங் கோயில் மாளிகை ஏழ் இருக்கையுள் இருந்த ஈசனுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம் தொடர்வன மறைகள்நான் கெனினும்கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்தூண்தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு செபவடம் சாட்டியக் குடியார்இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
சொற்பிரிப்பு
தொழுது பின் செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும்கழுதுறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்து ஊண்தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார்இழுதுநெய் சொரிந்தோம்பு அழல்ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர்கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடியிருள் திருநடம் புரியும்சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக் குடியார்இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
சொற்பிரிப்பு
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர்கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடியிருள் திருநடம் புரியும்சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார்இதயமாம் கமலம் கமலவர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம்மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை அரையர்தம் பாவைதருமலி வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக் குடியார்இருமுகம் கழல்மூன்று ஏழுகைத் தலம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
சொற்பிரிப்பு
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம்மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை அரையர் தம்பாவைதருமனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார்இருமுகம் கழல் மூன்று ஏழுகைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன் களைகணே, களைகண்மற் றில்லாத்தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும் சைவனே சாட்டியக் குடியார்க்(கு)இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ் இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.
சொற்பிரிப்பு
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும்கனகமே வெள்ளிக் குன்றமே என்தன் களைகணே களைகண் மற்று இல்லாத்தனியனேன் உள்ளம் கோயில் கொண்டருளும் சைவனே சாட்டியக்குடியார்க்குஇனிய தீங்கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத்துஅன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே ! அத்தனே பித்தனே னுடையசம்புவே அணுவே தாணுவே சிவனே ! சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.
சொற்பிரிப்பு
செம்பொனே பவளக் குன்றமே நின்ற திசைமுகன் மால்முதல் கூட்டத்துஅன்பரானவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடையசம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்குஇன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி ! சிவபுர நகருள்வீற் றிருந்தஅங்கணா போற்றி ! அமரனே போற்றி ! அமரர்கள் தலைவனே போற்றி !தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர் சாட்டியக் குடியிருந் தருளும்எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை இறைவனே ! போற்றியே போற்றி !
சொற்பிரிப்பு
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்தஅங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றிதங்கள் நான்மறைநூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்தருளும்எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி
உரை

உரை எழுதப்படவில்லை

9

சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் ! சிவபுர நகருள்வீற் றிருந்தஅத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் ! அமரர்கள் அதிபனே ! அருளாய்தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கைமுத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் ! முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே.
சொற்பிரிப்பு
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்தஅத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய்தத்துநீர்ப் படுகர்த் தண்தலைச் சூழல் சாட்டியக்குடியுள் ஏழ்இருக்கைமுத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர்கெடுத்து எனக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக் குடியார்ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர்மேல்காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன் கழறுசொல் மாலைஈர் ஐந்தும்மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே வளரொளி விளங்குவா னுலகே.
சொற்பிரிப்பு
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக்குடியார்ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர்மேல்காட்டிய பொருட்கலை பயில் கருவூரன் கழறு சொன்மாலை ஈரைந்தும்மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளரொளி விளங்கு வானுலகே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்