திருமுறை 9 · 9.013 · 11

திருச்சிற்றம்பலம்

கங்கைகொண்ட சோளேச்சரம்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
கங்கைகொண்ட சோளேச்சரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறியஎன்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறியஎன்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா ! ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை மழலையஞ் சிலம்படி முடிமேல்பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்தென்கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம்என்று ஓலமிட்டு ஒருநாள்மண்ணின் நின்று அலறேன் வழிமொழி மாலை மழலையம் சிலம்படி முடிமேல்பண்ணிநின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்தென்கண்ணின்நின்று அகலான் என்கொலோ கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும் தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும் பவளவா யவர்பணை முலையும்கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாய் அவர் பணை முலையும்கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும்வெண்ணீறும்சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும்மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகமலர்ந்து இருகணீர் அரும்பக்கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே !
சொற்பிரிப்பு
ஐய பொட்டிட்ட அழகுவாள் நுதலும், அழகிய விழியும் வெண்ணீறும்சைவம் விட்டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும்மொய்கொள் எண்திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இருகண் நீர் அரும்பக்கைகள் மொட்டிக்கும் என்கொலோ கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

சுருதிவா னவனாம் திருநெடு மாலாம் சுந்தர விசும்பின்இந் திரனாம்பருதிவா னவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த ஏறுசே வகனுமாம் பின்னும்கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்எருது வாகனனாம் எயில்கள்மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும்கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர் அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம் உள்கலந்(து) எழுபரஞ் சோதிகொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்தகண்டனே ! நீல கண்டனே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே !
சொற்பிரிப்பு
அண்டம் ஓர் அணுவாம் பெருமைகொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன்உண்ட ஊண் உனக்காம் வகையெனது உள்ளம் உள்கலந்து எழு பரஞ்சோதிகொண்ட நாண் பாம்பாப் பெருவரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்தகண்டனே நீலகண்டனே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த முழுமணித் திரள்அமு(து) ஆங்கேதாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய தன்மையில் என்னைமுன் ஈன்றநீதலைப் பட்டால் யானும் அவ்வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்காதலிற் பட்ட கருணையாய் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
மோதலைப் பட்ட கடல்வயிறு உதித்த முழுமணித்திரள் அமுது ஆங்கேதாய்தலைப்பட்டங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்றநீ தலைப்பட்டால் யானும் அவ்வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்காதலிற்பட்ட கருணையாய் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு) அமருல(கு) அளிக்கும்நின் பெருமைபித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்கைத்தலம் அடியேன் சென்னிமேல்வைத்த கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறு ஆயிரங் கூறிட்டுஅத்தில் அங்கு ஒருகூறு உன்கண் வைத்தவருக்கு அமருலகு அளிக்கும் நின் பெருமைபித்தனென்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும்கைத்தலம் அடியேன் சென்னிமேல்வைத்த கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல் பாவமுன் பறைந்துபா லனையபுண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப் புகுந்ததோர் யோகினில் பொலிந்துநுண்ணியை எனினும் நம்பநின் பெருமை நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர்போல் பாவமுன் பறைந்து பால் அனையபுண்ணியம் பின்சென்று அறிவினுக்கு அறியப் புகுந்ததோர் யோகினிற் பொலிந்துநுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என்கண்ணின் உள் மணியிற் கலந்தனை கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை உய்யக்கொண் டருளினை மருங்கில்கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில் கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அங்கை கொண்டு அமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம்பு அலம்ப வந்து ஒருநாள்உன் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில்கொங்கைகொண்டு அனுங்குங் கொடியிடை காணில் கொடியள் என்று அவிர்சடை முடிமேல்கங்கைகொண்டு இருந்த கடவுளே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை வளர்இளந் திங்களை முடிமேல்கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானைஅங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் அறைந்தசொல் மாலையால் ஆழிச்செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே.
சொற்பிரிப்பு
மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளந்திங்களை முடிமேற்கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானைஅங்கையோடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்