திருமுறை 9 · 9.012 · 11

திருச்சிற்றம்பலம்

திரைலோக்கிய சுந்தரம்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
காந்தாரம்
தலம்
திரைலோக்கிய சுந்தரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றேஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று)ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன்சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
சொற்பிரிப்பு
நீரோங்கி வளர் கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றேஆரோங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்தின்றுஊரோங்கும் பழிபாராது உன்பாலே விழுந்தொழிந்தேன்சீரோங்கும் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவேஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரைகையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
சொற்பிரிப்பு
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவேஐயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்று வரைகையாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும்செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அம்பளிங்கு பகலோன்பால் அடைப்பற்றாய் இவள்மனத்தில்முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்வம்பளிந்த கனியே ! என் மருந்தே ! நல் வளர்முக்கண்செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
சொற்பிரிப்பு
அம்பளிங்கு பகலோன் பால் அடைபற்றாய் இவள் மனத்தின்முன்பளிந்த காதலும் நின் முகந்தோன்ற விளங்கிற்றால்வம்பளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண்செம்பளிங்கே பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராதுஇஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறுசெய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
மைஞ்ஞின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராதுஇஞ்ஞின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார்மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பின் உறுசெய்ஞ்ஞன்றி இலன் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழைகோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்;ஆவா !என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்தேவா !தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
நீ வாராது ஒழிந்தாலும் நின்பாலே விழுந்து ஏழைகோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்ஆவா என்று அருள்புரியாய் அமரர்கணம் தொழுது ஏத்தும்தேவா தென்பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம்அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறுசெழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
முழுவதும் நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்பழுதெனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒருநாமம்அழுவதும் நின் திறம் நினைந்தே அதுவன்றோ பெறும் பேறுசெழுமதில் சூழ் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய்துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய்செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
தன் சோதி எழுமேனித் தபனியப் பூஞ்சாய்க்காட்டாய்உன்சோதி எழில் காண்பான் ஓலிடவும் உருக்காட்டாய்துஞ்சாக்கண் இவளுடைய துயர் தீருமாறு உரையாய்செஞ்சாலி வயற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பாதிரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
அரும்பேதைக்கு அருள்புரியாது ஒழிந்தாய் நின் அவிர்சடை மேல்நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ்நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பாதிரம்போது சொரி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டுவேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டுவீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
ஆறாத பேரன்பின் அவர் உள்ளம் குடிகொண்டுவேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டுவீறாடி இவள் உன்னைப் பொதுநீப்பான் விரைந்து இன்னம்தேறாள் தென் பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவைஇருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காய்எம் பெருமானே !முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும்திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளந்தெரிவைஇருந்தபரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானேமுரிந்த நடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும்திருந்து விழவு அணி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலைபூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சொற்பிரிப்பு
ஆரணத்தேன் பருகி அருந் தமிழ்மாலை கமழவரும்காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலைபூரணத்தார் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்