திருமுறை 9 · 9.008 · 11

திருச்சிற்றம்பலம்

கோயில்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
புறநீர்மை
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணல் கட்செவிப் பகுவாய்ப்பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தம் கோயில்மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில் மழைதவழ் வளரிளம் கமுகம்திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவை நாக்கு கறையணல் கட்செவிப் பகுவாய்பணம்விரி துத்திப் பொறிகொள் வெள் எயிற்றுப் பாம்பணி பரமர் தம் கோயில்மணம்விரி தரு தேமாம் பொழில் மொழுப்பில் மழை தவழ் வளர் இளம் கமுகம்திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும் ஏழையேற்(கு) என்னுடன் பிறந்தஐவரும் பகையே யார்துணை என்றால் அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக் கடைசியர் களைதரு நீலம்செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
இவ்வரும் பிறவிப் பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்தஐவரும் பகையே யார் துணை என்றால் ‘அஞ்சல்’ என்று அருள்செய்வான் கோயில்கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களைதரு நீலம்செய்வரம்பு அரும்பு[ம்] பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும் தமியனேன் துணைவஓ என்றும்நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம்புரி பரமர்தம் கோயில்வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர வளரிளம் சோலைமாந் தளிர்செந்தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
தாயின் நேர் இரங்கும் தலைவ! ஓ என்றும் தமியனேன் துணைவ! ஓ என்றும்நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர் தம் கோயில்வாயினேர் அரும்பு மணிமுருக்கு அலர வளர் இளம்சோலை மாந்தளிர் செந்தீயின் நேர் அரும்பு[ம்] பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத் தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்பநந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர்தம் கோயில்அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்பத் தொடர்ந்து இருடியர் கணம் துதிப்பநந்தி கை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர் தம் கோயில்அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என் களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டுஎன்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து) என்னையும் புணர்ப்பவன் கோயில்பண்பல தெளிதேன் பாடிநின் றாடப் பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
கண் பனி அரும்பக் கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டுஎன்பெலாம் உருகும் அன்பர் தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில்பண் பல தெளிதேன் பாடி நின்றாடப் பனிமலர்ச் சோலை சூழ் மொழுப்பில்செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும் நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்தவெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும் விரிசடை அடிகள்தங் கோயில்அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து) அகம்படி மணிநிரை பரந்தசெஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
நெஞ்சிடர் அகல அகம்புகுந்து ஒடுங்கும் நிலைமையோடு இருள்கிழித்து எழுந்தவெஞ்சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரிசடை அடிகள் தம் கோயில்அஞ்சுடர்ப் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம்படி மணிநிரை பரந்தசெஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்தமால் விடையோன்தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்றநின் றவன்வளர் கோயில்நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து நறுநெயால் மறையவர் வளர்த்ததீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்தமால் விடையோன்தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில்நாத்திரள் மறை ஓர்ந்து ஓம குண்டத்து நறுநெயால் மறையவர் வளர்த்ததீத்திரள் அரும்பு[ம்] பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும் புணர்ப்புடை அடிகள்தம் கோயில்ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும் அலைகடல் இடுதிரைப் புனிதத்தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோடு அண்டங்கள் அனைத்தும்போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்புடை அடிகள் தம் கோயில்ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரைப் புனிதத்தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும் பெரியதங் கருணையும் காட்டிஅன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு) அருள்புரி பரமர்தம் கோயில்புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறிவரி வண்டினம் பாடும்தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
பின்னு செஞ்சடையும் பிறை தவழ்மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டிஅன்னை தேன் கலந்து இன்னமுது உகந்தளித்தாங்கு அருள்புரி பரமர் தம் கோயில்புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டினம் பாடும்தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும் ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம் இருட் பிழம்(பு) அறஎறி கோயில்வம்புலாம் கோயில் கோபுரம் கூடம் வளர்நிலை மாடமா ளிகைகள்செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளிவளர் திருமணிச் சுடர்கான்றுஎம்பிரான் நடஞ்செய் சூழல் அங்கெல்லாம் இருள் பிழம்பு அற எறிகோயில்வம்புலாம் கோயில் கோபுரம் கூடம் வளர்நிலை மாட மாளிகைகள்செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து) எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த் துறைவளர் தீந்தமிழ் மாலைபொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில் பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
இருந்திரைத் தரளப் பரவை சூழ் அகலத்து எண்ணில் அம் கண்ணில் புன்மாக்கள்திருந்துயிர்ப் பருவத்து அறிவுறு கருவூர்த் துறை வளர் தீந்தமிழ் மாலைபொருந்து அரும் கருணைப் பரமர் தம் கோயில் பொழில் அகங்குடைந்து வண்டு உறங்கச்செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்