திருமுறை 9 · 9.007 · 11

திருச்சிற்றம்பலம்

திருவிடைக்கழி

அருளியவர்
சேந்தனார்
பண்
பஞ்சமம்
தலம்
இடைக்கழி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலைமேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன்சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றவேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே.
சொற்பிரிப்பு
மாலுலா மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலைமேலுலாம் தேவர் குலமுழுது ஆளும் குமரவேள் வள்ளி தன் மணாளன்சேலுலாம் கழனித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றவேலுலாம் தடக்கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க எழில் கவர்ந் தான்இளங் காளைகவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவரும் கள்வன்திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றகுவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும்* குழகன்நல் அழகன்நங் கோவே.*நங்கையானயக்கும்
சொற்பிரிப்பு
இவளை வார் இள மென் கொங்கையீர் பொங்க எழில் கவர்ந்தான் இளங்காளைகவள மா கரி மேல் கவரி சூழ் குடைக் கீழ்க் கனகக் குன்று என வரும் கள்வன்திவள மாளிகைசூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றகுவளை மா மலர்க்கண் நங்கை யானைக்கும்* குழகன் நல் அழகன் நம் கோவே.*நங்கையாள் நயக்கும்
உரை

உரை எழுதப்படவில்லை

3

கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்காவல்நற் சேனையென் னக்காப் பவன்என் பொன்னை மேகலை கவர்வானேதேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றதூவிநற் பீலி மாமயில் ஊரும் சுப்பிர மண்ணியன் தானே.
சொற்பிரிப்பு
கோவினைப் பவளக் குழ மணக்கோலக் குழாங்கள் சூழ் கோழி வெல்கொடியோன்காவல் நற்சேனை என்னக் காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானேதேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றதூவி நற்பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத்தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றகோனமர் கூத்தன் குலவிளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே !
சொற்பிரிப்பு
தானமர் பொருது தானவர் சேனை மடியச் சூர் மார்பினைத் தடிந்தோன்மானமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை மறை நிறை சட்டறம் வளரத்தேனமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றகோனமர் கூத்தன் குல இளங்களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளாத(து) அழகோமணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற்(று) அடியனேன் வாழத்திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றகணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே.
சொற்பிரிப்பு
குணமணிக் குருளைக் கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோமணமணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழத்திண மணிமாடத் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல்கீழ் நின்றகணமணி பொருநீர்க் கங்கை தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கிளையிளங் சேயக் கிரிதனை கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன்வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன்திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றமுளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு) அருளுங்கொல் முருகவேள் பரிந்தே.
சொற்பிரிப்பு
கிளை இளம் சேய் அக்கிரி தனைக் கீண்ட ஆண்டகை கேடில் வேல் செல்வன்வளை இளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன்திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றமுளை இளங்களிறு என் மொய்குழல் சிறுமிக்கு அருளும் கொல் முருகவேள் பரிந்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன்சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ சுந்தரத்(து) அரசிது என்னத்தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றவரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண்(டு) ஐயுறும் வகையே.
சொற்பிரிப்பு
பரிந்த செஞ்சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன்சொரிந்த சிந்துரமோ தூமணித் திரளோ சுந்தரத்து அரசு இது என்னத்தெரிந்த வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றவரிந்த வெஞ்சிலைக் கை மைந்தனை அஞ்சொல் மையல் கொண்டு ஐயுறும் வகையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை வானமர் விளைத்ததா ளாளன்புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன்திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றதொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என் துடியிடை மடல்தொடங் கினளே.
சொற்பிரிப்பு
வகைமிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன்புகைமிகும் அனலில் புரம் பொடி படுத்த பொன்மலை வில்லி தன் புதல்வன்திகைமிகு கீர்த்தித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றதொகைமிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடியிடை மடல் தொடங்கினளே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல் புறஇதழ் ஆகிலும் அருளான்இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன்திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றமடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து) அறுமுகத்(து) அமுதினை மருண்டே.
சொற்பிரிப்பு
தொடங்கினள் மடல் என்று அணிமுடித் தொங்கல் புறஇதழ் ஆகிலும் அருளான்இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன்திடங்கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றமடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுதினை மருண்டே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர்தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றகுருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
சொற்பிரிப்பு
மருண்டு உறை கோயில் மல்கு நற்குன்றப் பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர்வெருண்ட மான் விழியார்க்கு அருள் செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர்தெருண்ட வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றகுருண்ட பூங்குஞ்சிப் பிறைச்சடை முடி முக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச்செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் இவைசுவா மியையேசெழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றஎழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே.
சொற்பிரிப்பு
கொழுந்திரள் வாயார் தாய்மொழியாகத் தூமொழி அமரர் கோமகனைச்செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையேசெழுந்தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றஎழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்