திருமுறை 7 · 7.091 · 10

திருச்சிற்றம்பலம்

திருவொற்றியூர்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
குறிஞ்சி
தலம்
ஒற்றியூர்
நாடு
தொண்டைநாடு

1

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கேஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
பாட்டும்‌ பாடிப்‌ பரவித்‌ திரிவார்‌ஈட்டும்‌ வினைகள்‌ தீர்ப்பார்‌ கோயில்‌காட்டும்‌ கலமும் ‌ திமிலும்‌ கரைக்கேஓட்டும்‌ திரைவாய்‌ ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பந்துங் கிளியும் பயிலும் பாவைசிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
பந்தும்‌ கிளியும்‌ பயிலும்‌ பாவைசிந்தை கவர்வார்‌, செந்தீ வண்ணர்‌,எம் தம்‌ அடிகள்‌, இறைவர்க்கு இடம் போல்‌உந்தும்‌ திரைவாய் ‌ ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
பவளக் கனிவாய்ப்‌ பாவை பங்கன்‌,கவளக்‌ களிற்றின் ‌ உரிவை போர்த்தான்‌,தவழும்‌ மதி சேர் ‌ சடையாற்கு, இடம்போல்உகளும்‌ திரைவாய் ‌ ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்புன்னை மலரும் புறவிற் றிகழுந்தன்னை முன்னம் நினைக்கத் தருவான்உன்னப் படுவான் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
எ(ன்‌)னது எழிலும் ‌ நிறையும்‌ கவர்வான்புன்னை மலரும் ‌ புறவில்‌ திகழும்தன்னை முன்னம்‌ நினைக்கத்‌ தருவான்‌,உன்னப் படுவான்‌, ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்கணங்கள் சூழக் கபாலம் ஏந்திவணங்கும் இடைமென் மடவார் இட்டஉணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
பணம்‌ கொள்‌ அரவம் ‌ பற்றி, பரமன்‌,கணங்கள்‌ சூழக் ‌ கபாலம்‌ ஏந்தி,வணங்கும்‌ இடை மென் மடவார்‌ இட்டஉணங்கல்‌ கவர்வான்‌, ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்விடையார் கொடியன் வேத நாவன்அடைவார் வினைகள் அறுப்பான் என்னைஉடையான் உறையும் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
படை ஆர்‌ மழுவன்‌, பால் வெண்‌ நீற்றன்‌,விடை. ஆர்‌ கொடியன்‌, வேத நாவன்‌,அடைவார்‌ வினைகள்‌ அறுப்பான்‌, என்னைஉடையான்‌, உறையும்‌ ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சென்ற புரங்கள் தீயில் வேவவென்ற விகிர்தன் வினையை வீட்டநன்று நல்ல நாதன் நரையேறொன்றை உடையான் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
சென்ற புரங்கள் ‌ தீயில்‌ வேவவென்ற விகிர்தன்‌, வினையை வீட்டநன்றும்‌ நல்ல நாதன்‌, நரை ஏறுஒன்றை உடையான்‌, ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

கலவ மயில்போல் வளைக்கை நல்லார்பலரும் பரவும் பவளப் படியான்உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
கலவ மயில்‌ போல் ‌ வளைக்கை நல்லார்‌பலரும்‌ பரவும் ‌ பவளப் படியான்‌,உலகின்‌ உள்ளார் ‌ வினைகள்‌ தீர்ப்பான்‌,உலவும்‌ திரைவாய் ‌ ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பற்றி வரையை எடுத்த அரக்கன்இற்று முரிய விரலால் அடர்த்தார்எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
பற்றி வரையை எடுத்த அரக்கன்இற்று. முரிய விரலால்‌ அடர்த்தார்‌;எற்றும்‌ வினைகள் ‌ தீர்ப்பார்‌; ஓதம்‌ஒற்றும்‌ திரைவாய் ‌ ஒற்றியூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஒற்றி யூரும் அரவும் பிறையும்பற்றி யூரும் பவளச் சடையான்ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்தகற்றுப் பாடக் கழியும் வினையே.
சொற்பிரிப்பு
ஒற்றி ஊரும் ‌ அரவும்‌ பிறையும்‌பற்றி ஊரும்‌ பவளச் சடையான்‌ஒற்றியூர் மேல் ‌ ஊரன்‌ உரைத்தகற்றுப்‌ பாட, கழியும்‌, வினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்