திருமுறை 7 · 7.080 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கேதீச்சரம்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
நட்டபாடை
தலம்
கேதீச்சுரம்
நாடு
ஈழநாடு

1

நத்தார்புடை ஞானன்பசு ஏறிந்நனை கவுள்வாய்மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
நத்தார்‌ புடை ஞானன்‌; பசு ஏறி; நனை கவுள்‌ வாய்‌மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் ;பத்து ஆகிய தொண்டர்‌ தொழு, பாலாவியின்‌ கரைமேல்‌,செத்தார்‌ எலும்பு அணிவான்‌ திருக்‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
சுடுவார்‌ பொடி நீறும்‌, நல துண்டப் பிறை, கீளும்‌,கடம்‌ ஆர்‌ களி யானை உரி, அணிந்த கறைக்கண்டன்‌;பட ஏர்‌ இடை மடவாளொடு, பாலாவியின்‌ கரைமேல்‌திடமா உறைகின்றான்‌ திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்தவங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேற்செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அங்கம்‌ மொழி அன்னார்‌ அவர்‌, அமரர்‌, தொழுது ஏத்த,வங்கம்‌ மலிகின்ற கடல் ‌ மாதோட்ட நன் நகரில்‌பங்கம்‌ செய்த பிறை சூடினன்‌; பாலாவியின்‌ கரைமேல்‌செங்கண்‌ அரவு அசைத்தான்‌ திருக்‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கரியகறைக் கண்டன்நல கண்மேலொரு கண்ணான்வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேல்தெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
கரிய கறைக்கண்டன்‌; நல கண்மேல்‌ ஒரு கண்ணான்‌;வரிய சிறை வண்டு யாழ் செயும் ‌ மாதோட்ட நன்‌ நகருள்‌பரிய திரை எறியாவரு பாலாவியின்‌ கரைமேல்‌தெரியும்‌ மறை வல்லான்‌ திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

அங்கத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளிவங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற்தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அங்கத்து உறு நோய்கள்‌ அடியார் மேல்‌ ஒழித்து அருளிவங்கம்‌ மலிகின்ற கடல் ‌ மாதோட்ட நன்‌ நகரில்‌பங்கம்‌ செய்த மடவாளொடு பாலாவியின்‌ கரைமேல்‌தெங்கு அம் பொழில்‌ சூழ்ந்த திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வெய்யவினை யாயஅடி யார்மேலொழித் தருளிவையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
வெய்ய வினை ஆய அடியார் மேல்‌ ஒழித்து அருளி,வையம்‌ மலிகின்ற கடல் ‌ மாதோட்ட நன்‌ நகரில்பை ஏர்‌ இடை மடவாளொடு பாலாவியின்‌ கரைமேல்‌செய்ய சடைமுடியான்‌ திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளிவானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
ஊனத்து உறு நோய்கள்‌ அடியார் மேல்‌ ஒழித்து அருளி,வால்‌ நத்து உறு மலியும்‌ கடல் ‌ மாதோட்ட நன்‌ நகரில்‌பால்‌ நத்துறும்‌ மொழியாளொடு பாலாவியின்‌ கரைமேல்‌ஏனத்து எயிறு அணிந்தான்‌ திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்துமட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேற்சிட்டன்நமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அட்டன்‌ அழகு ஆக அரை தன் மேல்‌ அரவு ஆர்த்து,மட்டு உண்டு வண்டு ஆலும்‌ பொழில் ‌ மாதோட்ட நன்‌ நகரில்‌பட்ட அரி நுதலாளொடு பாலாவியின்‌ கரைமேல்‌சிட்டன்‌; நமை ஆள்வான்‌ திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்திமாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்தேவன்னெனை ஆள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
மூவர்‌ என, இருவர்‌ என, முக்கண்‌ உடை மூர்த்தி;மா இன் கனி தூங்கும்‌ பொழில்‌ மாதோட்ட நன் நகரில்‌பாவம்‌ வினை அறுப்பார்‌ பயில் ‌ பாலாவியின்‌ கரைமேல்‌தேவன்‌; எனை ஆள்வான்‌ திருக் ‌ கேதீச்சரத்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானைமறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்தகுறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.
சொற்பிரிப்பு
கறை ஆர்‌ கடல்‌ சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள்சிறை ஆர்‌ பொழில்‌ வண்டு யாழ் செயும் ‌ கேதீச்சரத்தானைமறை ஆர்‌ புகழ்‌ ஊரன்‌ அடித் தொண்டன்‌ உரை செய்தகுறையாத்‌ தமிழ் பத்தும்‌ சொலக் ‌ கூடா, கொடுவினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்