திருமுறை 7 · 7.004 · 10

திருச்சிற்றம்பலம்

திருஅஞ்சைக்களம்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
இந்தளம்
தலம்
அஞ்சைக்களம்
நாடு
மலைநாடு

1

தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னேஅலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னேமலைக்குந் நிகரொப் பனவன் திரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
தலைக்குத்‌ தலைமாலை அணிந்தது என்னே? சடைமேல்‌ கங்கை வெள்ளம்‌ தரித்தது என்னே?அலைக்கும்‌. புலித்தோல்‌ கொண்டு அசைத்தது என்னே? அதன்மேல்‌ கதநாகம்‌ கச்சு ஆர்த்தது என்னே?மலைக்கு நிகர்‌ ஒப்பன வன்‌ திரைகள்‌ வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,அலைக்கும்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

பிடித்தாட்டி ஓர்நாகத் தைப்பூண்ட தென்னே பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னேபொடித்தான் கொண்டுமெய்ம் முற்றும்பூசிற் றென்னே புகரே றுகந்தேறல் புரிந்த தென்னேமடித்தோட் டந்துவன் றிரைஎற் றியிட வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரியஅடித்தார் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
பிடித்து ஆட்டி ஓர்‌ நாகத்தைப்‌ பூண்டது என்னே? பிறங்கும்‌ சடைமேல்‌ பிறை சூடிற்று என்னே?பொடித்தான்‌ கொண்டு மெய்ம்‌ முற்றும்‌ பூசிற்று என்னே? புகர்‌ ஏறு உகந்து ஏறல்‌, புரிந்தது என்னே?மடித்து, ஓட்டந்து, வன்‌ திரை எற்றியிட, வளர்‌ சங்கம்‌ அங்காந்து முத்தம்‌ சொரிய,அடித்து ஆர்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே சிறியார் பெரியார் மனத்தேறல் உற்றால்முந்தித் தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க் கமராசந்தித் தடமால் வரைபோல் திரைகள் தணியா திடறுங் கடலங் கரைமேல்அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே ! சிறியார்‌ பெரியார்‌, மனத் தேறல் உற்றால்‌;முந்தித்‌ தொழுவார்‌ இறவார்‌; பிறவார்‌; முனிகள் முனியே! அமரர்க்கு அமரா!சந்தித்‌ தடமால் வரை போல்‌ திரைகள்‌ தணியாது இடறும்‌ கடல்‌ அம் கரைமேல்‌,அந்தித் தலைச்‌ செக்கர் வானே ஒத்தியால்‌ அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உனையே ஒத்தியால்குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்மழைக்குந் நிகர்ஒப் பனவன் திரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
இழைக்கும்‌ எழுத்துக்கு உயிரே ஒத்தியால்‌; இலையே ஒத்தியால்‌; உனையே ஒத்தியால்‌;குழைக்கும்‌ பயிர்க்கு ஓர்‌ புயலே ஒத்தியால்‌; அடியார் தமக்கு ஓர்‌ குடியே ஒத்தியால்‌மழைக்கு நிகர்‌ ஒப்பன வன்‌ திரைகள்‌ வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டுஅழைக்கும்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

வீடின் பயனென் பிறப்பின் பயனென் விடையே றுவதென் மதயா னைநிற்கக்கூடும் மலைமங் கைஒருத் தியுடன் சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னேபாடும் புலவர்க் கருளும் பொருளென் நிதியம் பலசெய் தகலச் செலவில்ஆடுங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
வீடின்‌ பயன்‌ என்‌? பிறப்பின்‌ பயன்‌ என்‌? விடை ஏறுவது என்‌, மதயானை நிற்க?கூடும்‌ மலைமங்கை ஒருத்தி உ.டன்‌ சடைமேல்‌ கங்கையாளை நீ சூடிற்று என்னே?பாடும்‌ புலவர்க்கு அருளும்‌ பொருள்‌ என்‌? நிதியம் பல செய்த கலச்‌ செலவில்‌ஆடும்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே இறந்தார் தலையிற் பலிகோடல் என்னேபரவித் தொழுவார் பெறுபண்டம் என்னே பரமா பரமேட் டிபணித் தருளாய்உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தம் கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டரவக் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே? இறந்தார்‌ தலையில்‌ பலி கோடல்‌ என்னே?பரவித்‌ தொழுவார்‌ பெறு பண்டம்‌ என்னே? பரமா, பரமேட்டி, பணித்துஅருளாய்‌ !உரவத்தொடு, சங்கமொடு இப்பி முத்தம்‌ கொணர்ந்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,அரவக்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஆக்கும் மழிவும் ஐயநீ என்பன்நான் சொல்லுவார் சொற்பொரு ளவைநீ என்பன்நான்நாக்கும் செவியுங் கண்ணும்நீ என்பன்நான் நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்நோக்கும் நிதியம் பலஎத் தனையும் கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்திஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
ஆக்கும்‌ அழிவும்‌ ஐய நீ என்பன்‌, நான்‌; சொல்லுவார்‌ சொல்பொருள்‌அவை, நீ என்பன்‌, நான்‌;நாக்கும்‌ செவியும்‌ கண்ணும்‌, நீ என்பன்‌, நான்‌; நலனே! இனி நான்‌ உனை நன்கு உணர்ந்தேன்‌.நோக்கும்‌ நிதியம் பல எத்தனையும்‌ கலத்தில்‌ புகப்‌ பெய்துகொண்டு, ஏற நுந்திஆர்க்கும்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன் விளங்குங் குழைக்கா துடைவே தியனேஇறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத் தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங் கடுகப் பிரமன் தலையைந் திலும்ஒன்றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
வெறுத்தேன்‌, மனைவாழ்க்கையை விட்டொழிந்தேன்‌; விளங்கும்‌ குழைக்‌ காது உடை வேதியனே!இறுத்தாய்‌, இலங்கைக்கு இறை ஆயவனை, தலைபத்தொடு தோள் பல இற்று விழ;கறுத்தாய்‌, கடல்நஞ்சு அமுது உண்டு கண்டம்‌: கடுகப்‌ பிரமன்‌ தலை ஐந்திலும்‌ ஒன்றுஅறுத்தாய்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச் சிலைதொட் டவனே உனைநான் மறவேன்வடிக்கின் றனபோற் சிலவன் திரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
பிடிக்குக்‌ களிறே ஒத்தியால்‌; எம்பிரான்‌! பிரமற்கும்‌ பிரான்‌; மற்றை மாற்கும்‌ பிரான்‌;நொடிக்கும்‌ அளவில்‌ புரம் மூன்று எரியச்‌ சிலை தொட்டவனே! உனை நான்‌ மறவேன்‌வடிக்கின்றன போல்‌ சில வன்‌ திரைகள்‌ வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டுஅடிக்கும்‌ கடல்‌ அம் கரைமேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

எந்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்அந்தண் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனைமந்தம் முழவுங் குழலும் மியம்பும் வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்னசந்தம் மிகுதண் தமிழ்மாலை கள்கொண் டடிவீ ழவல்லார் தடுமாற் றிலரே.
சொற்பிரிப்பு
எம் தம்‌ அடிகள்‌, இமையோர் பெருமான்‌, எனக்கு என்றும்‌ அளிக்கும்‌ மணிமிடற்றன்‌,அம்‌ தண்கடல்‌ அம்கரை மேல்‌ மகோதை அணி ஆர்‌ பொழில்‌ அஞ்சைக்களத்து அப்பனை,மந்தம்‌ முழவும்‌ குழலும்‌ இயம்பும்‌ வளர்‌ நாவலர்கோன்‌ நம்பி ஊரன்‌ சொன்னசந்தம்‌ மிகு தண்தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார்‌ தடுமாற்று இலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்