திருமுறை 7 · 7.003 · 10

திருச்சிற்றம்பலம்

திருநெல்வாயில் அரத்துறை

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
இந்தளம்
தலம்
நெல்வாயில் அரத்துறை
நாடு
நடுநாடு

1

கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனேநல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
கல்வாய்‌ அகிலும்‌ கதிர்‌ மா மணியும்‌ கலந்து உந்தி வரும்‌ நிவவின்‌ கரைமேல்‌நெல்வாயில்‌ அரத்துறை நீடு உறையும்‌, நிலவெண்‌ மதி சூடிய, நின்மலனே!'நல்‌ வாய்‌ இல் செய்தார்‌, நடந்தார்‌, உடுத்தார் நரைத்தார்‌, இறந்தார்‌' என்று நானிலத்தில்‌சொல்‌ ஆய்க்‌ கழிகின்றது அறிந்து, அடியேன்‌ தொடர்ந்தேன்‌; உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

கறிமா மிளகும் மிகுவன் மரமும் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய் நெல்வா யில்அரத் துறைநின் மலனேவறிதே நிலையாத இம்மண் ணுலகில் நரனா கவகுத் தனைநா னிலையேன்பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப் பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
கறி மா மிளகும்‌ மிகு வல்‌ மரமும்‌ மிக உந்தி வரும்‌ நிவவின்‌ கரைமேல்‌,நெறி வார் குழலார்‌அவர்‌ காண, நடம்செய்‌ நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே!வறிதே நிலையாத இம்‌ மண்ணுலகில்‌ நரன்‌ ஆக வகுத்தனை; நான்‌ நிலையேன்‌;பொறிவாயில்‌ இவ்‌ ஐந்தினையும்‌ அவியப்‌ பொருது, உன்‌ அடியே புகும்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

புற்றா டரவம் அரையார்த் துகந்தாய் புனிதா பொருவெள் விடையூர் தியினாய்எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால் நெல்வா யில்அரத் துறைநின் மலனேமற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான் வண்டார் குழலாள் மங்கைபங் கினனேஅற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
புற்று ஆடு அரவம்‌ அரை ஆர்த்து உகந்தாய்‌! புனிதா! பொரு வெள்விடை ஊர்தியினாய்‌!எற்றே ஒரு கண்‌ இலன்‌, நின்னை அல்லால்‌; நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே!மற்றே ஒரு பற்று இலன்‌; எம்பெருமான்‌! வண்டு ஆர்‌ குழலாள்‌ மங்கை பங்கினனே !அற்று ஆர்‌ பிறவிக்கடல்‌ நீந்தி ஏறி, அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

கோடுயர் கோங்க லர்வேங் கையலர் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்நீடுயர் சோலை நெல்வா யிலரத் துறைநின் மலனே நினைவார் மனத்தாய்ஓடு புனற்க ரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவிவாடி இருந்து வருந்தல் செய்யா தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
கோடு உயர்‌ கோங்கு அலர்‌ வேங்கை அலர்‌ மிக உந்தி வரும்‌ நிவவின்‌ கரைமேல்‌நீடு உயர்‌ சோலை நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே! நினைவார்‌ மனத்தாய்‌!ஓடு புனல் கரை ஆம்‌, இளமை; உறங்கி விழித்தால்‌ ஒக்கும்‌, இப்‌ பிறவி;வாடி இருந்து வருந்தல் செய்யாது, அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

உலவு முகிலிற் றலைகற் பொழிய உயர்வே யொடிழி நிவவின் கரைமேல்நிலவு மயிலா ரவர்தாம் பயிலும் நெல்வா யிலரத் துறைநின் மலனேபுலனைந் தும்மயங் கியகங் குழையப் பொருவே லோர்நமன் றமர்தாம் நலியஅலமந்து மயங்கி அயர்வ தன்முன் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
உலவும்‌ முகிலில்‌ தலை கல்‌ பொழிய, உயர்‌ வேயொடு இழி நிவவின்‌ கரைமேல்‌,நிலவும்‌ மயிலார்‌ அவர் தாம்‌ பயிலும்‌, நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே!புலன் ஐந்தும்‌ மயங்கி, அகம்‌ குழைய, பொரு வேல்‌ ஓர்‌ நமன் தமர் தாம்‌ நலிய,அலமந்து மயங்கி அயர்வதன்‌ முன்‌, அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஏலம் இலவங் கம்எழிற் கனகம் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்வாலூன் றவருந் தும்முடம் பிதனை மகிழா தழகா வலந்தேன் இனியான்ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
ஏலம்‌ இலவங்கம்‌ எழில் கனகம்‌ மிக உந்தி வரும்‌ நிவவின்‌ கரைமேல்‌,நீலம் மலர்ப்‌ பொய்கையில்‌ அன்னம்‌ மலி, நெல்வாயில்‌ அரத்துறையாய்‌! ஒரு நெல்‌வால்‌ ஊன்ற வருந்தும்‌ உடம்பு இதனை மகிழாது, அழகா! அலந்தேன்‌, இனி யான்‌;ஆலந்‌ நிழலில்‌ அமர்ந்தாய்‌! அமரா! அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

சிகரம் முகத்திற் றிரளார் அகிலும் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும் நெல்வா யிலரத் துறைநின் மலனேமகரக் குழையாய் மணக்கோ லமதே பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
சிகரம்‌ முகத்தில்‌ திரள்‌ ஆர்‌ அகிலும்‌ மிக உ.ந்தி வரும்‌ நிவவின்‌ கரைமேல்‌,நிகர்‌ இல்‌ மயிலார்‌ அவர் தாம்‌ பயிலும்‌, நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே!மகரக் குழையாய்‌! மணக்கோலம்‌ அதே பிணக்கோலம்‌ அது ஆம்‌, பிறவி இது தான்‌;அகரம்‌ முதலின்‌ எழுத்து ஆகி நின்றாய்‌! அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன் றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளிஞெண்டா டுநெடு வயல்சூழ் புறவின் நெல்வா யிலரத் துறைநின் மலனேபண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற் பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்அண்டா வமரர்க் கமரர் பெருமான் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
திண்‌ தேர்‌ நெடுவீதி இலங்கையர் கோன்‌ திரள்தோள்‌ இருபஃதும்‌ நெரித்து அருளி,ஞெண்டு ஆடு நெடு வயல்‌ சூழ்‌ புறவின்‌ நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே!பண்டே மிக நான்‌ செய்த பாக்கியத்தால்‌, பரஞ்சோதி! நின்‌ நாமம்‌ பயிலப் பெற்றேன்‌;அண்டா! அமரர்க்கு அமரர் பெருமான்‌! அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

மாணா வுருவா கியோர்மண் ணளந்தான் மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும் நெல்வா யிலரத் துறைநின் மலனேவாணார் நுதலார் வலைப்பட் டடியேன் பலவின் கனியீயதுபோல் வதன்முன்ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
மாணா உரு ஆகி ஓர்‌ மண்‌ அளந்தான்‌, மலர் மேலவன்‌ , நேடியும்‌ காண்பு அரியாய்‌!நீள்நீள்‌ முடி வானவர்‌ வந்து இறைஞ்சும்‌ நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனே!வாண்‌ ஆர்‌ நுதலார்‌ வலைப்பட்டு, அடியேன்‌, பலவின் கனி ஈ அது போல்வதன்‌ முன்‌,ஆணொடு பெண்‌ ஆம்‌ உரு ஆகி நின்றாய்‌! அடியேன்‌ உய்யப்போவது ஓர்‌ சூழல்‌ சொல்லே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின் நெல்வா யிலரத் துறைநின் மலனைத்தேரூர் நெடுவீதி நன்மா டமலி தென்னா வலர்கோ னடித்தொண்டனணிஆரூ ரனுரைத் தனநற் றமிழின் மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்காரூர் களிவண் டறையானை மன்ன ரவராகி யோர்விண் முழுதாள் பவரே.
சொற்பிரிப்பு
நீர்‌ ஊரும்‌ நெடு வயல்‌ சூழ்‌ புறவின்‌ நெல்வாயில்‌ அரத்துறை நின்மலனைத்‌தேர்‌ ஊர்‌ நெடுவீதி நல்‌ மாடம்‌ மலி தென்‌ நாவலர்கோன்‌ அடித்தொண்டன்‌ , அணிஆரூரன்‌ உரைத்தன நல்‌-தமிழின்‌ மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்‌கார்‌ ஊர்‌ களி வண்டு அறை யானை மன்னர்‌- அவர்‌ ஆகி, ஓர்‌ விண் முழுது ஆள்பவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்