திருமுறை 4 · 4.097 · 11

திருச்சிற்றம்பலம்

திருநல்லூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
நல்லூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அட்டுமின் இல்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்துமட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோகொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.
சொற்பிரிப்பு
அட்டுமின் இல்பலி என்று என்று அகம் கடைதோறும் வந்துமட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோகொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள்அரவும்நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடங் கொண்டவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாரும்நல் லூரகத்தேபண்ணிட்ட பாடலர் ஆடல ராய்ப்பற்றி நோக்கிநின்றுகண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.
சொற்பிரிப்பு
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய்பலிக்கு என்று உழல்வார்நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தேபண்இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி நோக்கி நின்றுகண்ணிட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக்கண்டரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

படவேர் அரவல்குற் பாவைநல் லீர்பக லேயொருவர்இடுவார் இடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்துநடவார் அடிகள் நடம்பயின் றாடிய கூத்தர்கொலோவடபாற் கயிலையுந் தென்பால்நல் லூருந்தம் வாழ்பதியே.
சொற்பிரிப்பு
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர்இடுவார் இடைப்பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்துநடவார் அடிகள் நடம்பயின்று ஆடிய கூத்தர்கொலோவடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனையநஞ்சணி கண்டன்நல் லூருறை நம்பனை நானொருகாற்துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.
சொற்பிரிப்பு
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனையநஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை, நான் ஒருகால்துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழநண்ணில யத்தொடு பாட லறாதநல் லூரகத்தேதிண்ணிலை யங்கொடு நின்றான் திரிபுர மூன்றெரித்தான்கண்ணுளும் நெஞ்சத் தகத்தும் உளகழற் சேவடியே.
சொற்பிரிப்பு
வெண்மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழநண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தேதிண் நிலயம் கொடு நின்றான் திரிபுரம் மூன்று எரித்தான்;கண்ணுளும் நெஞ்சத்து அகத்தும் உள கழல் சேவடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தாற்தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய ஆதரைப்போற்காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே.
சொற்பிரிப்பு
தேற்றப் படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்தோற்றப் படச் சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால்ஆற்றில் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப் போல்காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்த நல்லூரகத்தேகீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்வாட்கொண்ட நோக்கி மனைவியொ டுமங்கொர் வாணிகனைஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே.
சொற்பிரிப்பு
நாள்கொண்ட தாமரைப் பூத்தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தேகீள்கொண்ட கோவணம் கா என்று சொல்லிக் கிறிபடத்தான்வாள்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனைஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இவ் அகலிடமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல்நறைமல்கு கொன்றையந் தாருடை யானும்நல் லூரகத்தேபறைமல்கு பாடலன் ஆடல னாகிப் பரிசழித்தான்பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே.
சொற்பிரிப்பு
அறைமல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர்சடைமேல்நறைமல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தேபறைமல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்பிறைமல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்குந்துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுதுநல்லூர்க்கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரைஅன்னியர் அற்றவர் அங்கண னேயருள் நல்கென்பரே.
சொற்பிரிப்பு
மன்னிய மாமறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும்துன்னிய தொண்டர்கள் இன்இசை பாடித் தொழுது நல்லூர்க்கன்னியர் தாமும் கனவுஇடை உன்னிய காதலரைஅன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள்நெய்தல்குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னிமருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கள்நல்லூர்உருவமர் பாகத் துமையவள் பாகனை உள்குதுமே.
சொற்பிரிப்பு
திருஅமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள் நெய்தல்குருஅமர் கோங்கம் குராமகிழ் சண்பகம் கொன்றை வன்னிமருஅமர் நீள்கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும்வல்லேன் புகவும் மதில்சூழ் இலங்கையர் காவலனைக்கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்நல்லூ ரிருந்த பிரான்அல்ல னோநம்மை ஆள்பவனே.
சொற்பிரிப்பு
செல் ஏர் கொடியன் சிவன் பெருங் கோயில் சிவபுரமும்வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர் காவலனைக்கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல்அடியான்நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்