திருமுறை 3 · 3.094 · 11

திருச்சிற்றம்பலம்

திருவெங்குரு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சீர்காழி - 04-வெங்குரு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவெண் பொடியணி வீரேசுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல் எண்ணவல் லாரிட ரிலரே.
சொற்பிரிப்பு
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய சுண்ண வெண்பொடி அணிவீரே;சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல் எண்ண வல்லார் இடர் இலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய ஆதிய அருமறை யீரேஆதிய அருமறை யீருமை யலர்கொடு ஓதிய ருணர்வுடை யோரே.
சொற்பிரிப்பு
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய ஆதிய அருமறையீரே;ஆதிய அருமறையீர்! உமை அலர்கொடு ஓதியர் உணர்வு உடையோரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய இளம்பிறை யணிசடை யீரேஇளம்பிறை யணிசடை யீரும திணையடி உளங்கொள உறுபிணி யிலரே.
சொற்பிரிப்பு
விளங்கு தண்பொழில் அணி வெங்குரு மேவிய இளம்பிறை அணி சடையீரே;இளம்பிறை அணி சடையீர்! உமது இணை அடி உளம் கொள, உறு பிணி இலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய வண்டமர் வளர்சடை யீரேவண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத் தொண்டர்கள் துயர்பிணி யிலரே.
சொற்பிரிப்பு
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய வண்டு அமர் வளர் சடையீரே;வண்டு அமர் வளர் சடையீர்! உமை வாழ்த்தும் அத் தொண்டர்கள் துயர், பிணி, இலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய அக்கினொ டரவசைத் தீரேஅக்கினொ டரவசைத் தீரும தடியிணை தக்கவர் உறுவது தவமே.
சொற்பிரிப்பு
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய அக்கினொடு அரவு அசைத்தீரே;அக்கினொடு அரவு அசைத்தீர்! உமது அடி இணை தக்கவர் உறுவது தவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய அந்தமில் பெருமையி னீரேஅந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு சிந்தைசெய் வோர்வினை சிதைவே.
சொற்பிரிப்பு
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய அந்தம் இல் பெருமையினீரே;அந்தம் இல் பெருமையினீர்! உமை அலர்கொடு சிந்தை செய்வோர் வினை சிதைவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய அழல்மல்கும் அங்கையி னீரேஅழல்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு தொழஅல்லல் கெடுவது துணிவே.
சொற்பிரிப்பு
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய அழல் மல்கும் அங்கையினீரே;அழல் மல்கும் அங்கையினீர்! உமை அலர்கொடு தொழ, அல்லல் கெடுவது துணிவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வித்தக மறையவர் வெங்குரு மேவிய மத்தநன் மலர்புனை வீரேமத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ் சித்தம துடையவர் திருவே.
சொற்பிரிப்பு
வித்தக மறையவர் வெங்குரு மேவிய மத்த நல் மலர் புனைவீரே;மத்த நல் மலர் புனைவீர்! உமது அடி தொழும் சித்தம் அது உடையவர் திருவே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய ஆலநன் மணிமிடற் றீரேஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ் சீலம துடையவர் திருவே.
சொற்பிரிப்பு
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய ஆல நல் மணிமிடற்றீரே;ஆல நல் மணிமிடற்றீர்! உமது அடி தொழும் சீலம் அது உடையவர் திருவே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய அரைமல்கு புலியத ளீரேஅரைமல்கு புலியத ளீரும தடியிணை உரைமல்கு புகழவர் உயர்வே.
சொற்பிரிப்பு
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய அரை மல்கு புலி அதளீரே;அரை மல்கு புலி அதளீர்! உமது அடி இணை உரை மல்கு புகழவர் உயர்வே!
உரை

உரை எழுதப்படவில்லை

11 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 11-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

திருச்சிற்றம்பலம்