திருமுறை 3 · 3.093 · 11

திருச்சிற்றம்பலம்

திருஅம்பர்மாகாளம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
அம்பர் மாகாளம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
படியுள் ஆர் விடையினர், பாய் புலித் தோலினர், பாவநாசர்பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை மங்கையோடும்அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
கையில் மான் மழுவினர், கடுவிடம் உண்ட எம் காளகண்டர்செய்ய மா மேனியர், ஊன் அமர் உடைதலைப் பலி திரிவார்வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ, நடம் அது ஆடும்ஐயன், மா தேவியோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர், பரிவு இலார் பால்கரவினர், கனல் அன உருவினர், படுதலைப் பலிகொடு ஏகும்இரவினர், பகல் எரிகான் இடை ஆடிய வேடர், பூணும்அரவினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளைஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கைஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர், நிமலர், வெள்ஏற்றினர், எரி புரி கரத்தினர், புரத்து உளார் உயிரை வவ்வும்கூற்றினர், கொடியிடை முனிவு உற நனி வரும் குலவு கங்கை-ஆற்றினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்றமறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்தஅறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
புறத்தினர், அகத்து உளர், போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தைத்திறத்தினர், அறிவு இலாச் செதுமதித் தக்கன் தன் வேள்வி செற்றமறத்தினர், மாதவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள் புரிந்தஅறத்தினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்தகுழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்றகழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
பழகமா மலர் பறித்து, இண்டை கொண்டு, இறைஞ்சுவார் பால் செறிந்தகுழகனார், குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்றகழகனார், கரி உரித்து ஆடு கங் காளர், நம் காளி ஏத்தும்அழகனார், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளேஎங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணிஅங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
சங்க வார் குழையினர், தழல் அன உருவினர், தமது அருகேஎங்கும் ஆய் இருந்தவர், அருந்தவ முனிவருக்கு அளித்து உகந்தார்பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணிஅங்கம் ஆறு ஓதுவார், இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே
சொற்பிரிப்பு
பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில்இலங்கைக்குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர், கோயில் கூறில்பெரு சிலை, நல மணி, பீலியோடு, ஏலமும், பெருக நுந்தும்அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
சொற்பிரிப்பு
வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர் உளானும்,எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து, பின்னும்பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு என்றும்அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே.
சொற்பிரிப்பு
சாக்கியக்கயவர், வன் தலை பறிக் கையரும், பொய்யினால்நூல்ஆக்கிய மொழி அவை பிழையவை; ஆதலில், வழிபடுவீர்வீக்கிய அரவு உடைக் கச்சையான், இச்சை ஆனவர்கட்கு எல்லாம்ஆக்கிய அரன், உறை அம்பர்மா காளமே அடைமின், நீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்தஅம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்*கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்னநம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.
சொற்பிரிப்பு
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல் அரிசில் சூழ்ந்தஅம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை,கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்னநம்பிநாள் மொழிபவர்க்கு இல்லைஆம் வினை;நலம்பெறுவர் தாமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்