திருமுறை 3 · 3.059 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்குடமூக்கு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
குடமூக்கு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலேமரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமாஇரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
அர விரி கோடல் நீடல்அணி காவிரியாற்று அயலே,மர விரி போது, மௌவல்,மணமல்லிகை, கள் அவிழும்குர, விரி சோலை சூழ்ந்த,குழகன், குடமூக்கு இடமா,இர விரி திங்கள் சூடிஇருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஓத்தர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலேபூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்லகூத்தர வங்களோவாக் குழகன்குட மூக்கிடமாஏத்தர வங்கள்செய்ய இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
ஓத்து அரவங்களோடும்ஒலி காவிரி ஆர்த்து, அயலேபூத்து, அரவங்களோடும்,புகை கொண்டு அடி போற்றி, நல்லகூத்து அரவங்கள் ஓவா,குழகன், குடமூக்கு இடமா,ஏத்து அரவங்கள் செய்ய,இருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மயில்பெடை புல்கியால மணல்மேல்மட அன்னமல்கும்பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமாஇயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
மயில் பெடை புல்கி ஆல,மணல் மேல் மட அன்னம் மல்கும்,பயில் பெடை வண்டு பண் செய்பழங்காவிரிப் பைம்பொழில் வாய்,குயில் பெடையோடு பாடல்உடையான்; குடமூக்கு இடமா,இயலொடு வானம் ஏத்த,இருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவஅக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமாஎக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
மிக்கு அரை தாழ வேங்கைஉரி ஆர்த்து, உமையாள் வெருவ,அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர்கொக்கரையோடு பாடல்உடையான்; குடமூக்கு இடமா,எக்கரையாரும் ஏத்த,இருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வடிவுடை வாட்டடங்கண் ணுமையஞ்சவோர் வாரணத்தைப்பொடியணி மேனிமூட வுரிகொண்டவன் புன்சடையான்கொடிநெடு மாடமோங்குங் குழகன்குட மூக்கிடமாஇடிபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
வடிவு உடை வாள்—தடங்கண்உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப்பொடி அணி மேனி மூடஉரிகொண்டவன்; புன்சடையான்;கொடி நெடுமாடம் ஓங்கும்,குழகன், குடமூக்கு இடமா,இடி படு வானம் ஏத்தஇருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலேதழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமாஇழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
கழை வளர் கவ்வை முத்தம்கமழ் காவிரியாற்று அயலே,தழை வளர் மாவின், நல்லபலவின், கனிகள் தயங்கும்குழை வளர் சோலை சூழ்ந்த,குழகன், குடமூக்கு இடமா,இழை வளர் மங்கையோடும்இருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமுய்யச்சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங்குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமாஇலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
மலை மலி மங்கை பாகம்மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச்சிலை மலி வெங்கணையால்சிதைத்தான், புரம் மூன்றினையும்;குலை மலி தண்பலவின்பழம் வீழ் குடமூக்கு இடமா,இலை மலி சூலம் ஏந்திஇருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்படுமிடர் கண்டயரப் பருமால்வரைக் கீழடர்த்தான்கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ்குட மூக்கிடமாஇடுமணல் எக்கர்சூழ இருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
நெடு முடிபத்து உடையநிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப்படும் இடர் கண்டு அயர,பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;கொடு மடல் தங்கு தெங்குபழம் வீழ் குடமூக்கு இடமா,இடு மணல் எக்கர் சூழஇருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரியநீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்லகூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமாஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
ஆர் எரி ஆழியானும்அலரானும் அளப்பு அரியநீர் இரி புன்சடை மேல்நிரம்பா மதி சூடி, நல்லகூர் எரி ஆகி நீண்டகுழகன்; குடமூக்கு இடமா,ஈர் உரி கோவணத்தோடுஇருந்தான்; அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர்நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்கூடிய குன்றமெல்லா முடையான்குட மூக்கிடமாஏடலர் கொன்றைசூடி யிருந்தானவன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
மூடிய சீவரத்தார்,முது மட்டையர், மோட்டு அமணர்நாடிய தேவர் எல்லாம்நயந்து ஏத்திய நன் நலத்தான்,கூடிய குன்றம் எல்லாம்உடையான், குடமூக்கு இடமா,ஏடு அலர் கொன்றை சூடிஇருந்தான்—அவன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான்நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்லதண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.
சொற்பிரிப்பு
வெண்கொடி மாடம் ஓங்குவிறல் வெங்குரு நன் நகரான்-நண்பொடு நின்ற சீரான்,தமிழ் ஞானசம்பந்தன்—நல்லதண் குடமூக்கு அமர்ந்தான்அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்விண் புடை மேல் உலகம்வியப்பு எய்துவர்; வீடு எளிதே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்