திருமுறை 3 · 3.058 · 11

திருச்சிற்றம்பலம்

திருச்சாத்தமங்கை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பஞ்சமம்
தலம்
சாத்தமங்கை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றேபெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கைஅருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
திருமலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே?பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கைஅரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதேகடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கைஅடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்தக்,கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே?கடி—மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கைஅடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறிமானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவேதானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கைஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து, ஏறு அது ஏறி,மான் அன நோக்கி தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே?தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கைஆன் நலம் தோய்ந்த எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசிப்புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவேகற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசிப்புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே? கற்றவர் சாத்தமங்கைநகர் கைதொழச் செய்த பாவம்அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவேசந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கைஅந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
வெந்த வெண் நீறு பூசி, விடை ஏறிய வேத கீதன்,பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே?சந்தம் ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,அந்தம் ஆம் ஆதி ஆகி, அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச்சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றேசாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கைஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது ஆகி,சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றேசாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கைஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசிஉமையையொர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றேசமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கைஅமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி,உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே?சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகிவிண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையேதண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கைஅண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி,விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே?தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கைஅண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணொர்பாகம்ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றேகாரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணாஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
பேர் எழில்—தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம்ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே?கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணாஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றேசங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கைஅங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
கங்கை ஓர் வார்சடைமேல் அடைய, புடையே கமழும்மங்கையோடு ஒன்றி நின்ற(ம்) மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே?சங்கை இல்லா மறையோர் அவர்தாம் தொழு சாத்தமங்கை,அங்கையில் சென்னி வைத்தாய்! அயவந்தி அமர்ந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.
சொற்பிரிப்பு
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், ”மன்னும்நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர்” என்று தொண்டர்அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்