திருமுறை 3 · 3.049 · 11

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாயத் திருப்பதிகம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
பொது
நாடு
பொது

1

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதுநாதன் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்வம்பு நாண்மலர் வார்மது வொப்பதுசெம்பொ னார்தில கம்முல குக்கெலாம்நம்பன் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எலாம்;நம்பன் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்தக்க வானவ ராத்தகு விப்பதுநக்கன் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்துஅக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்தக்க வானவராத் தகுவிப்பதுநக்கன் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றிநயனன் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்நயம் வந்து ஓத வல்லார் தமை நண்ணினால்;நியமம்தான் நினை வார்க்கு இனியான் நெற்றிநயனன், நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்நல்லார் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்நல்லார் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

மந்த ரம்மன பாவங்கள் மேவியபந்த னையவர் தாமும் பகர்வரேல்சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்நந்தி நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவியபந்தனையவர் தாமும் பகர்வரேல்,சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்நந்தி நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நரக மேழ்புக நாடின ராயினும்உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்விரவி யேபுகு வித்திடு மென்பரால்வரதன் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்விரவியே புகு வித்திடும் என்பரால்-வரதன் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகைநலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகைநலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்பாதந் தான்முடி நேடிய பண்பராய்யாதுங் காண்பரி தாகி அலந்தவர்ஓதும் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்பாதம் தான் முடி நேடிய பண்பராய்,யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்ஓதும் நாமம் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
சொற்பிரிப்பு
“நந்தி நாமம் நமச்சிவாய!” எனும்சந்தையால்,—தமிழ் ஞானசம்பந்தன் சொல்சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்பந்தபாசம் அறுக்க வல்லார்களே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்