திருமுறை 3 · 3.047 · 11

திருச்சிற்றம்பலம்

திருஆலவாய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்வேட்டு வேள்விசெய் யாவமண் கையரைஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரைஓட்டி வாது செயத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

2

மத்த யானையின் ஈருரி மூடியஅத்த னேயணி ஆலவா யாய்பணிபொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
மத்தயானையின் ஈர் உரி மூடியஅத்தனே! அணி ஆலவாயாய்! பணிபொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண்சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

3

மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந்திண்ண கத்திரு ஆலவா யாயருள்பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஓதி யோத்தறி யாவமண் ஆதரைவாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமேஆதி யேதிரு ஆலவா யண்ணலேநீதி யாக நினைந்தருள் செய்திடே.
சொற்பிரிப்பு
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரைவாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்கையி லுண்டுழ லும்மமண் கையரைப்பைய வாதுசெ யத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும்செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்கையில் உண்டு உழ லும் அமண்கையரைப்பைய வாது செயத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

6

நாறு சேர்வயல் தண்டலை மிண்டியதேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
நாறு சேர் வயல்— தண்டலை மிண்டியதேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச்சீறி, வாது செயத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

7

பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந்தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்அண்ட னேயமண் கையரை வாதினில்செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
பண்டு அடித்தவத்தார் பயில்வால்—தொழும்தொண்டருக்கு எளி யாய்! திரு ஆலவாய்அண்டனே! அமண் கையரை வாதினில்செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

8

அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச்செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப்பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக்கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்செருக்கினைத் தவிர்த் தாய்! திரு ஆலவாய்பரக்கும் மாண்பு உடை யாய்! அமண்பாவரை,கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

9

மாலும் நான்முக னும்மறி யாநெறிஆல வாயுறை யும்மண்ண லேபணிமேலை வீடுண ராவெற்ற ரையரைச்சால வாதுசெ யத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறிஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணிமேலைவீடு உணரா வெற்று அரையரைச்சால வாது செயத் திரு உள்ளமே?
உரை

உரை எழுதப்படவில்லை

10

கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமேதெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.
சொற்பிரிப்பு
கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?தெழிக்கும் பூம்புனல் சூழ் திரு ஆலவாய்மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்மைந்த னேயென்று வல்லம ணாசறச்சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.
சொற்பிரிப்பு
“செந்து எனா முரலும் திரு ஆலவாய்மைந்தனே!” என்று, வல் அமண் ஆசு அற,சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்-பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்