திருமுறை 3 · 3.024 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கழுமலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைகண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
தொண்டு அணைசெய் தொழில்— துயர் அறுத்து உய்யல் ஆம்வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமேநியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
“அயர்வு உளோம்!” என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே!நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமேவிடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
“அடைவு இலோம்” என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபலகற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபலகற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமேநிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே!நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிடநெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவேகருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
அரக்கனார் அரு வரை எடுத்தவன்—அலறிட,நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்அடியொடு முடியறி யாவழல் உருவினன்கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்அடியொடு முடி அறியா அழல் உருவினன்;கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனைஅருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
சொற்பிரிப்பு
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனைஅருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்