திருமுறை 3 · 3.023 · 11

திருச்சிற்றம்பலம்

திருவிற்கோலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
விற்கோலம்
நாடு
தொண்டைநாடு

1

உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கியசெருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கியசெருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

2

சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில்உற்றது ஓர் எரியினன்; ஒரு சரத்தினால்,வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அறச்செற்றவன்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்பையர வல்குலாள் பாக மாகவுஞ்செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

4

விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனைஉதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனைஉதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப்புதைத்தவன்; நெடு நகர்ப்— புரங்கள் மூன்றையும்சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

5

முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினைசிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான்,கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்,அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினைசிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

6

தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம்வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்;மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச்செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

7

விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசறஎரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அறஎரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

8 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9

திரிதரு புரமெரி செய்த சேவகன்வரியர வொடுமதி சடையில் வைத்தவன்அரியொடு பிரமன தாற்ற லால்உருத்தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"திரி தரு புரம் எரிசெய்த சேவகன்,வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்,அரியொடு பிரமனது ஆற்றலால் உருத்தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

10

சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்குபார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்சீர்மையினான் இடம் திரு விற்கோலமே."
உரை

உரை எழுதப்படவில்லை

11

கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவியசேடன செழுமதில் திருவிற் கோலத்தைநாடவல் லதமிழ் ஞானசம் பந்தனபாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
"கோடல் வெண்பிறையனை, கூகம் மேவியசேடன செழு மதில் திரு விற்கோலத்தை,நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தனபாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே."
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்