1
சொற்பிரிப்பு
உரை
எருதினை ஊர்தியாக ஏறுவோன்; நாற்றம் வீசும் எலும்பினையும் அரவினையும் அணிந்த பெருமானார்; ஆயுதமாக மழுவினை ஏந்தினார்; அவர் எழுந்தருளிய இடமாவது, கொடைக்குச் சலியாதவர்கள், குலமும் உயர்ந்தவர்கள் ஆகிய மறையோர்கள் தம் பக்கங்களில் ஆற்றும் வேள்விகளிலிருந்து எழும் புகை விண்ணுலகிலும் உலவும் புகலியே.